நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மூன்று வைட்டமின்கள்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மூன்று வைட்டமின்கள்!

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரைப் பார்க்கவே வேண்டாம் என்று ஆங்கிலத்தில் பழமொழி சொல்வார்கள். இதன் அர்த்தம் ஆப்பிளில் உள்ள ஊட்டச்சத்து உடலில் நோய் வராமல் தடுக்கும் என்பதாகும். ஒரு ஆப்பிளை சாப்பிட்டாலே அவ்வளவு பலன் என்றால், தினமும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துவந்தால் எவ்வளவு பலன் கிடைக்கும்?

கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கொரோனாவுக்கு தடுப்பூசியோ, சிகிச்சையோ இல்லை. இந்த நிலையில் நம்மை தாமே பாதுகாத்துக் கொள்வதுதான் கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே வழி. தனித்திருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை இந்த நேரத்தில் உட்கொள்வது நம்மை காக்கும்.

vitamin-c

நோய் எதிர்ப்பு சக்தி என்றாலே அதற்கு முக்கிய காரணம் வைட்டமின் சி. உடலில் வைட்டமின் சி குறையும்போது எல்லாம் பல்வேறு உடல் நல குறைபாடுகள் ஏற்படுகின்றன. நல்லவேளை வைட்டமின் சி மிக எளிய உணவுகளிலேயே அதிக அளவில் கிடைக்கின்றன. நம் ஊரில் எளிதில் கிடைக்கும் கொய்யா, எலுமிச்சை, திராட்சை, அன்னாசி பழம் தொடங்கி ஆரஞ்சு, ஸ்டிராபெர்ரி என பல உணவுகளில் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. இவற்றை தினமும் சாப்பிட்டு வரலாம். வைட்டமின் சி குறைபாடு இருந்தால் எவ்வளவு எடுத்துக்கொள்வது என்பது பற்றி மருத்துவர் பரிந்துரைப்பார்.
வைட்டமின் பி6. நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க துணை புரியும் முக்கியமான ஊட்டச்சத்து பி6. இது கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றில் நிறைவாக உள்ளது. இதுதவிர கீரை, கொண்டைக் கடலையிலும் ஓரளவுக்கு பி6 வைட்டமின் உள்ளது. சிக்கன் மூலமாக கொரோனா பரவும் என்பது வெறும் வதந்திதான். எனவே, முடிந்தவர்கள் சிக்கன் சாப்பிடுங்கள்.

vitamin b

எண்ணெய்யில் பொறித்து சாப்பிடாமல், குழம்பு வைத்து சாப்பிடுவதே நல்லது.
வைட்டமின் இ. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடவும் துணை புரிகிறது வைட்டமின் இ. இந்த வைட்டமின் பாதாம், பிஸ்தா, முந்திரி, விதைகளில் நிறைவாக உள்ளது.

vitamin- e

தினமும் ஒன்று இரண்டு பாதாம், முந்திரியை சாப்பிடுவது மூளை, நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும், நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும்.