நோய்களுக்கு மதம் பார்க்கத் தெரியுமா..? கொரோனாவை கொண்டொழிக்க முடியுமா..? 

 

நோய்களுக்கு மதம் பார்க்கத் தெரியுமா..? கொரோனாவை கொண்டொழிக்க முடியுமா..? 

உலகம் முழுவதும் கொரோனா தொற்று  தயவு தாட்சண்யமின்றி, வேற்றுமை காணாது வேட்டையாடி வருகிறது. அரபு நாடுகள் அலறித்துடிக்கின்றன. கிறிஸ்தவ நாடுகள் விம்மி வெடிக்கின்றன. பெளத்த நாடுகள் பயந்து நடுங்குகின்றன. 

உலகம் முழுவதும் கொரோனா தொற்று  தயவு தாட்சண்யமின்றி, வேற்றுமை காணாது வேட்டையாடி வருகிறது. அரபு நாடுகள் அலறித்துடிக்கின்றன. கிறிஸ்தவ நாடுகள் விம்மி வெடிக்கின்றன. பெளத்த நாடுகள் பயந்து நடுங்குகின்றன. 

பாரபட்சம் காட்டாமலும் உலகத்தையே பாடாய் படுத்தி வரும் கொரோனாவை வைத்து மத வேறுபாட்டை கையாள்வது சில இடங்களில் கொரோனாவை விட கொடூர பிரச்னையாய் உருவெடுத்து வருகிறது. குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்கள் தான் மாநாட்டில் பங்கேற்று இந்த நோயை பரப்பியதாக வேற்றுமை விதைத்து வருகின்றனர். 

tabliqui-jamaat-02

ஊரடங்கு கட்டுப்பாடு மட்டும் இல்லாமல் போயிருந்தால் பல இடங்களில் இந்தக் குற்றச்சாட்டு மதக்கலவரங்கள் வெடித்திருக்கக்கூடும் என பதைபதைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ஆனால், அப்படியொரு சம்பவத்தை கற்பனை செய்து பார்க்கக்கூட மனது விம்முகிறது. நோய் என்பது மதம் பார்த்து வருவதில்லை. மனிதர்களைப்போல நோய்களுக்கு மதம் பார்க்கத் தெரியாது. மதம் மனிதர்களுக்கு எதிரியல்ல. நோய் தான் மனிதர்களுக்கு எதிரி என்பதை பகுத்துணர்ந்தால் இங்கு வேற்றுமைக்கு இம்மியளவும் இடமில்லை. 

மதம் என்பது மருவி, மனிதம் தலைக்க வேண்டும். ஆனால், உயிர்களை காப்பாற்றிக் கொள்ள உலகமே போராடிக் கொண்டிருக்கிற நேரத்தில் நம் பொது எதிரியாக உருவெடுத்துள்ள கொரோனாவை ஒழிக்கவே ஒன்று திரள வேண்டுமே ஒழிய சக மனிதனை மதத்தால் பிரித்து பாரபட்சம் காட்டக்கூடாது. 

united human

துயரமான நேரத்தில் மக்களின் உயிரை பணயம் வைத்து மலிவான அரசியல் செய்வோரை ஒதுக்கித்தள்ளி  இந்தியா மதம் சார்ந்த நாடல்ல. மனிதம் உரைக்கும் நாடு. 130 கோடி மக்களும் சொந்தங்களே என்பதை இந்த உலகிற்கே நாம் உணர்த்த வேண்டிய தருணம் இது. 

’’மனிதா விழித்துக்கொள்… நம் இயற்கை அன்னையின் அறைக்குவல் இது. நாம் நம் ஜாதி மத பேத வேற்றுமைகளை களைந்து ஒன்றிணைவோம். விலகி இருப்போம். பாதுகாப்பாய் இருப்போம்’’ என சமூக அக்கறையுடன் ஒற்றுமைக்காக குரல் கொடுத்து வருகிறது #unitedhuman அமைப்பு. இது தனி அமைப்பின் அக்கறையல்ல. சமூகத்தின் அக்கறை என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது அந்த அமைப்பு. இதுவே சமூக நல ஆர்வலர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.