நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை: 8 மணி நேரத்திற்கு ஒருமுறை மாத்திரை சாப்பிட்ட சோகம்!?

 

நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை: 8 மணி நேரத்திற்கு ஒருமுறை மாத்திரை சாப்பிட்ட சோகம்!?

நடிகை சுஷ்மிதா சென்  2014ஆம் ஆண்டில் தனது உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். 

மும்பை:  நடிகை சுஷ்மிதா சென்  2014ஆம் ஆண்டில் தனது உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். 

sushmita

முதல் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்று, பாலிவுட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர், நடிகை சுஷ்மிதா சென். 43 வயதான இவர், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை நடத்தி வருகிறார்.ஆனால், ரெனீ, அலிசா என்ற இரண்டு பெண்களைத் தத்தெடுத்து தன்னுடனே வளர்த்து வருகிறார்.

sushmita

இவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான ரோமன் ஷால் என்ற இளம் மாடலை சுஷ்மிதா காதலித்து வருகிறார்.  இருவரும் பல நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகச் சென்று வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள இருப்பதாகப் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. இருப்பினும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தற்போது இல்லை. ரோமனுடன் தற்போது ரொமான்ஸ் மட்டும் தான் என்று கூறியிருந்தார்.

sushmita

இந்நிலையில் சமீபத்தில் சுஷ்மிதா சென் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,  ‘2014ஆம் ஆண்டு படப்பிடிப்பிலிருந்தபோது திடீரென மயங்கி  விழுந்தேன். எனக்கு என்ன நடந்தது என்று மருத்துவர்கள் கூட கண்டுபிடிக்கவில்லை. தீவிர பரிசோதனைக்கு பின்னர் அட்ரினல் சுரப்பி பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் நான் இறந்து விடுவேன் என்று மருத்துவர்கள் கூறினர். பிறகு மாத்திரை மூலம் இதைச் சரிசெய்ய முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். அதனால்  8 மணி நேரத்திற்கு ஒருமுறை மாத்திரைகளை   உட்கொண்டு  தான் உயிர் பிழைத்தேன்’ என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.