நோக்கியா பிரியர்களே உஷார்.. குறைந்த விலையுடன் கவர வருகிறது நோக்கியா ஸ்மார்ட்போன்கள்!!

நோக்கியா பிரியர்களே உஷார்.. குறைந்த விலையுடன் கவர வருகிறது நோக்கியா ஸ்மார்ட்போன்கள்!!

ஏற்கனவே சந்தையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது நோக்கியா நிறுவனம். அதேபோல் மேலும் குறைந்த விலையுடன் இன்னும் சில புதிய மாடல்களையும் நோக்கியா நிறுவனம் தொழில் நுட்ப சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

அன்று முதல் இன்று வரை நோக்கியா மொபைல்கள் என்றால் அதற்கு தனி மவுசு இந்திய தொழில்நுட்ப சந்தையில் உண்டு. இன்றளவும் அதை வாங்கி உபயோகிப்பார்கள் ஏராளமானோர் உள்ளனர். 

nokia

ஸ்மார்ட்போன் விற்பனையின் ஆரம்ப கட்டத்தில் விண்டோஸ் இயங்குதளத்துடன் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்ததால் மக்கள் பெரிதும் விரும்ப வில்லை. அதன்பிறகு கடந்த சில ஆண்டுகளாக ஆன்ட்ராய்டு இயங்கு தளத்துடன் ஒப்பந்தம் தொழிநுட்ப சந்தையில் விற்பனைக்கு நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வந்துள்ளது. 

ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்துடன் வெளிவந்த பிறகு முன்பிருந்ததைவிட பலரும் நோக்கியா ஸ்மார்ட் போன்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சந்தையில் விற்பனைக்கு இருக்கும் நோக்கியா 7.1 மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஆகிய ஸ்மார்ட் போன்களில் விலை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. 

நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன்களில் 4ஜிபி மாடல் சுமார் 14 ஆயிரம் ரூபாய்க்கும் நோக்கியா 6.1 பிளஸ் மாடல் 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் விலை அமேசான் தளத்தில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

nokia ph

நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட் போன்கள் 10 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல் நோக்கிய 7.1 ஸ்மார்ட்போன்கள் 12 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த அதிரடி விலை குறைப்பினால் நோக்கியா 7.1, 6.1 பிளஸ் ஸ்மார்ட் போன்களில் மீதான ஆர்டர்கள் அதிகரித்து உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதற்கு காரணம் செப்டம்பர் மாதம் முதல் நோக்கியா 7.2 மற்றும் நோக்கியா 6.2 ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்கள் தொழில்நுட்ப சந்தையில் விற்பனைக்கு வெளிவர இருப்பதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட் போன்களின் விலை குறித்து எந்தவித தகவலும் வெளிவரவில்லை. விலை குறித்து வெளிவந்த தகவல்கள் அனைத்தும் ஒரு யூகம் தான். செப்டம்பர் மாதம் இதன் விலைகள் வெளியிடப்பட இருக்கின்றன.