நொடி நேரத்தில் சமையல் செய்து அசத்தும் சோஃபி ரோபோ!! 

 

நொடி நேரத்தில் சமையல் செய்து அசத்தும் சோஃபி ரோபோ!! 

 

 

சிங்கப்பூரில் சோஃபி என்ற ரோபோ நொடி நேரத்தில் உணவு வகைகளை சமைத்து கொடுத்து வாடிக்கையாளர்களை அசத்தி வருகிறது.

தொழில்துறையில் ரோபோ புரட்சிதான் உலக பொருளாதாரத்தில் திருப்பு முனையாக உள்ளது. தொழில்நுட்ப புரட்சியால் அனைத்து துறைகளிலும் உள்ள மனித உழைப்பு பணிகள்கூட ரோபோக்கள் வசமாகிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. கல்வி, அறிவியல், மருத்துவம் என அனைத்து துறைகளிலும் ரோபோக்களின் ஆதிக்கம் அதிகரித்துகொண்டே வருகிறது. 

இந்நிலையில்  சிங்கப்பூரில் உள்ள பொறியியல் நிறுவனம் ஒன்றால் சோஃபி என்ற ரோபோவை உருவாக்கியுள்ளது. அந்த ரோபோ அந்நாட்டில் பிரபல உணவு வகையான லக்சா, நூடுல்ஸ், சூப் போன்ற ஏராளமான உணவுகளை 45 நொடிகளில் சமைத்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறது. மணிக்கு சுமார் 80 சூப் பவுல்களை சோஃபி தயார் செய்து தருகிறது. ஆரன்ஞ் க்லோவ் ஓட்டலில் சமையல்காரராக சோஃபி நியமிக்கப்பட்டுள்ளது. சோஃபியின்  உணவை ருசித்த வாடிக்கையாளர்கள் ரோபோவிற்கும் மனிதனுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை . இரண்டு பேர் செய்வதும் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது என தெரிவிக்கின்றனர். அந்த ஓட்டலில் உள்ள சமையல்காரர்களின் வேலைகளை சோஃபி பறித்துவிட்டது என்றே கூறலாம்.