நேர்கொண்ட பார்வை: அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் 

 

நேர்கொண்ட பார்வை: அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் 

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளியான படம் நேர்கொண்ட பார்வை.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான இதை போனி கபூர் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க பெண்களைப் பற்றி உருவாகியுள்ள இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அது மட்டுமின்றி பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை செய்து வருகிறது. 

ஒரு பெண் நோ என்று சொன்னால் அதன் அர்த்தம் நோ என்று அஜித் பேசிய வசனம் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாக உள்ளது. இதில் அஜித்தின் நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த படத்தை பார்த்த பின்பு நடிகர் ரஜினிகாந்த்,தல அஜித்திற்கு தொலைப்பேசி மூலம் அழைத்துப் பாராட்டு தெரிவித்துள்ளாராம். அவரின் வாழ்த்திற்கு அஜித் நன்றி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.