நேரலையில் பெண் செய்தியாளரை பின்னால் தட்டிய இளைஞர் நலத்துறை அமைச்சர்…வைரல் வீடியோ!

 

நேரலையில் பெண் செய்தியாளரை பின்னால் தட்டிய இளைஞர் நலத்துறை அமைச்சர்…வைரல் வீடியோ!

நேரலையில் பெண் செய்தியாளரை அமைச்சர் ஒருவர் பின்பக்கம் தட்டிய அமைச்சருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்துள்ளது.

 

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் மாரத்தான்  போட்டி ஒன்று நடைபெற்றது. அலெக்ஸ் போஜார்ஜியன் என்ற பெண் செய்தியாளர் ஒருவர் அடஹி நேரலையில் வழங்கி கொண்டிருந்தார். அப்போது சில போட்டியாளர்கள் கேமிரா முன் நின்று கத்திக்கொண்டும், கைகளை அசைத்தும் சென்று கொண்டிருந்தனர். அப்போதும் அலெக்ஸ் போஜார்ஜியன் அசராமல் நேரலையில் பேசி கொண்டிருந்தார். 

ஆனால் திடீரென்று மாரத்தான் போட்டியில் ஓடி கொண்டிருந்த போட்டியாளர் ஒருவர் போஜார்ஜியனின் பின்புறத்தைத் தட்டி சென்றார். இதனால் அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். போஜார்ஜியனின் பின்புறத்தைத் தட்டியவர்  வேறுயாரும் இல்லை,  43 வயதான டாமி கால்வே. இவர் ஜார்ஜியாவின் இளைஞர் நலத்துறை அமைச்சர் என்பது தான் இன்னும் கொடுமையான தகவல்.  இந்த வீடியோவானது இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அமைச்சருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.

இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள அவர், ‘ நான் அவர் முதுகில் தட்ட சென்றேன். வேகத்தில் எங்குப்பட்டது என்று தெரியவில்லை. வேறு எந்த தவறான நோக்கமும் இல்லை. பெண் செய்தியாளர் என்னை மன்னிக்க  வேண்டும்’ என்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.