நேபாளத்தில் நேர்ந்த சோகம் -கேரளாவைச் சேர்ந்த 8 சுற்றுலாப் பயணிகள் இறப்பு … 

 

நேபாளத்தில் நேர்ந்த சோகம் -கேரளாவைச் சேர்ந்த 8 சுற்றுலாப் பயணிகள் இறப்பு … 

நேபாளத்தின் டாமனில் ஒரு ஹோட்டல் அறையில் மயக்க நிலையில் காணப்பட்ட எட்டு இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களின் சந்தோஷமான  விடுமுறை சோகமாக மாறியது. மயக்கநிலையிலிருந்த அவர்கள் செவ்வாய்க்கிழமை காத்மாண்டு மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டனர். அப்போது ஹீட்டரிலிருந்து கசிந்த எரிவாயு  காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு   அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர் .

நேபாளத்தின் டாமனில் ஒரு ஹோட்டல் அறையில் மயக்க நிலையில் காணப்பட்ட எட்டு இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களின் சந்தோஷமான  விடுமுறை சோகமாக மாறியது. மயக்கநிலையிலிருந்த அவர்கள் செவ்வாய்க்கிழமை காத்மாண்டு மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டனர். அப்போது ஹீட்டரிலிருந்து கசிந்த எரிவாயு  காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு   அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

nepal-hotel

கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழு, விடுமுறைக்காக  நேபாளம் சென்றிருந்தது. அவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு போகாராவிலிருந்து வந்து  கொண்டிருந்தனர்.அப்போது நேபாளத்தின் மக்வான்பூர் மாவட்டத்தில் , டாமனில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கினார்கள்  .அவர்கள் நான்கு அறைகளை முன்பதிவு செய்ததாக ரிசார்ட்டின் மேலாளர்  கூறினார், ஆனால் அவர்களில் எட்டு பேர் ஒரு அறையில் தங்கியுள்ளனர், மீதமுள்ளவர்கள் மற்ற அறைகளில் தங்கியுள்ளனர்.இப்பகுதி கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 2500 மீட்டர் உயரத்தில் உள்ளது. அவர்கள் தங்களை குளிரிலிருந்து காத்துக்கொள்ள  இரவு முழுவதும் கேஸ் ஹீட்டரை இயக்கியிருந்தனர். அப்போது ஹீட்டரில் எரிவாயு கசிந்து,மூச்சு திணறல் ஏற்பட்டு 
ஸ்ரீபத்ரா (9), ஆர்ச்சா (8) மற்றும் அபி நாயர் (7) ஆகிய மூன்று குழந்தைகளுடன் பிரவீன் கிருஷ்ணன் நாயர் (39) மற்றும் அவரது மனைவி சரண்யா (34) ஆகியோர் இறந்தனர். இதில் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பிரவீனின் நண்பர் ரஞ்சித் குமாரும்  இறந்தார் . இவருக்கு  இரண்டு குழந்தைகள் இருந்தனர், அவரின் மகன் மாதவ் வேறு அறையில் தூங்கிக் கொண்டிருந்ததால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது.

kerala-family-0212

இறந்த நபர்கள் டாமனில் உள்ள எவரெஸ்ட் பனோரமா ரிசார்ட்டுக்குள் பூட்டப்பட்ட ஒரு அறைக்குள் மயக்க நிலையில் காணப்பட்டனர். ஹோட்டல் மேலாளரின் கூற்றுப்படி, அவர்கள் மயக்க நிலையில் இருந்த அறையின்  உள்ளே இருந்து சத்தம் கேட்டு , மற்ற அறையில் தங்கியிருந்தவர்கள் அவர்களை  உடனடியாக காத்மாண்டுக்கு விமானத்தில் மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர் 
கார்பன் மோனாக்சைடு விஷம் காரணமாக பலர்   இது போல கடந்த காலங்களில் இறந்துள்ளனர் . ஒரு ஹீட்டர் ஒரு மூடப்பட்ட அறையில்  பயன்படுத்தப்படும்போது, வாயு கசிவு அறையில் ஏற்பட்டு  கார்பன் மோனாக்சைடு உருவாகி, விஷமாகிவிடும்  .

கார்பன் மோனாக்சைடு விஷம் அல்லது கார்பன் மோனாக்சைடு மூலம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு  8 பேரும் இறந்திருப்பார்கள்  என்று நம்பப்படுகிறது .   . இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே போல் காத்மாண்டு ஹோட்டலில் மூச்சுத்திணறல் காரணமாக இரண்டு சீன பிரஜைகள் இறந்தனர், 
பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்காக மருத்துவர்கள் தற்போது  இந்திய தூதரகத்தின்  ஆவணங்களுக்காக  காத்திருக்கிறார்கள்