நேசமணியை தாக்கிய கிருஷ்ண மூர்த்தியை பிரபல நடிகர் சுத்தியலால் பழி வாங்கினார்!

 

நேசமணியை தாக்கிய கிருஷ்ண மூர்த்தியை பிரபல நடிகர் சுத்தியலால் பழி வாங்கினார்!

நேசமணியை தாக்கிய கிட்சிணமூர்த்திக்கு சுத்தியலால் அடித்து தண்டனை கொடுத்துள்ளார் பிரபல நகைச்சுவை நடிகர் சதிஷ். 

சென்னை: நேசமணியை தாக்கிய கிட்சிணமூர்த்திக்கு சுத்தியலால் அடித்து தண்டனை கொடுத்துள்ளார் பிரபல நகைச்சுவை நடிகர் சதிஷ்.

கடந்த 2001ம் ஆண்டு விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா நடிப்பில் வெளியான படம் ப்ரெண்ட்ஸ். இதில் வடிவேலு காண்ட்ராக்டர் நேசமணி கதாபாத்திரத்திலும், ரமேஷ் கண்ணா கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதில் ஒரு சீனில் ரமேஷ் கண்ணாவின் கைதவறி சுத்தியல் வடிவேலு தலையில் விழுந்து மயக்கமடைவார். 

இந்த காமெடியை மையப்படுத்தி சில தினங்களுக்கு முன்பு ட்விட்டரில் (#Pray_for_Neasamani) என்ற ஹேஷ்டேக் உலகம் முழுவதும் ட்ரெண்டானது. அதற்கு சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என்று பலர் கருத்து தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்தனர். 

மேலும் நேசமணியின் நிலைமைக்கு காரணமான கிருஷ்ணமூர்த்தியை தற்போது பழி வாங்கப்பட்டிருக்கிறார். பிரபல காமெடி நடிகர் சதீஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் ரமேஷ் கண்ணாவை சுத்தியால் அடிப்பது போன்ற வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ‘பழிவாங்கப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி’ என்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.