நெல்லைக் கண்ணனை விசாரிக்கச் சொல்லும் இந்து அமைப்புக்கள்… ஜெய் ஷா பற்றி அமலாக்கத்துறை விசாரிக்க கேட்பார்களா? 

 

நெல்லைக் கண்ணனை விசாரிக்கச் சொல்லும் இந்து அமைப்புக்கள்… ஜெய் ஷா பற்றி அமலாக்கத்துறை விசாரிக்க கேட்பார்களா? 

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 2018ம் ஆண்டு ரூ.120 கோடி வந்துள்ளதாகவும் இதில் நெல்லைக் கண்ணனுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் கோரிக்கைவிடுத்துள்ளன

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 2018ம் ஆண்டு ரூ. 120 கோடி வந்துள்ளதாகவும் இதில் நெல்லைக் கண்ணனுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் கோரிக்கைவிடுத்துள்ளன.

nellai-kannan

 
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவைப் பற்றி அவதூறாக பேசியதாக நெல்லைக் கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.க போர்க்கொடி தூக்கியது. இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நெல்லைக் கண்ணன் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 2018ம் ஆண்டு ரூ.120 கோடி நிதி உதவி வந்துள்ளது என்றும் அதை வைத்துத்தான் இந்தியா முழுக்க குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டிவிடுவதாகவும் இந்து அமைப்புக்கள் குற்றம்சாட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நெல்லை கண்ணணுக்கும் கூட பணம் கொடுத்திருக்கலாம் என்று அதிர்ச்சியூட்டும் செய்தியை இவர்களாகக் கிளப்பிவிட்டு வருகின்றனர். எனவே, நெல்லை கண்ணன் சொத்து, வங்கி கணக்குகளை அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

congress-tamil nadu

இதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது இப்போது மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா நடத்திய நிறுவனத்தில் ஐந்தே நாளில் ரூ.3118 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. இது பற்றி எல்லாம் விசாரணை செய்யாமல் கண்ணை மூடிக்கொண்டு இருக்கும் அமலாக்கத் துறை, மேடையில் பேச நெல்லை கண்ணன் வாங்கிய சில ஆயிரம் ரூபாய் பற்றிய விசாரணை நடத்த வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.