நெல்லைக் கண்ணனை கைது செய்யக்கோரி போராடினால் குற்றமா? கேள்வி எழுப்பும் பாஜக!

 

நெல்லைக் கண்ணனை கைது செய்யக்கோரி போராடினால் குற்றமா? கேள்வி எழுப்பும் பாஜக!

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை கொலை செய்யத் தூண்டிய நெல்லைக் கண்ணனை கைது செய்யக்கோரி போராடினால் குற்றமா? என பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. 

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை கொலை செய்யத் தூண்டிய நெல்லைக் கண்ணனை கைது செய்யக்கோரி போராடினால் குற்றமா? என பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. 

Bharatiya Janata Party

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பில் நெல்லையில் நடந்த மாநாட்டில் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய நெல்லை கண்ணன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியின் சோலியை முடிக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.  அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து, பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு  செய்துள்ளனர். 

Bharatiya Janata Party

இந்நிலையில், ஏற்கனவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நெல்லை கண்ணன் இன்று நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் நெல்லை கண்ணனை கைது செய்யாவிட்டால் மெரினாவில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன்படி இன்று மெரினா கடற்கரையில் ஹெச். ராஜா தலைமையில் மெரினாவில் போராட்டம் நடைபெற்றது. அப்போது தடையை மீறி போராட்டம் நடத்தியதாக பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

 

இந்நிலையில் தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை கொலை செய்யத் தூண்டிய நெல்லைக் கண்ணனை கைது செய்யக்கோரி போராடினால் குற்றமா?. போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்கள் இல.கணேசன்,பொன் ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன் ,ஹெச் ராஜா மற்றும் இதர நிர்வாகிகள் கைது செய்யபட்டனர் !” என கேள்வி எழுப்பியுள்ளனர்.