‘நெருங்கும் நியூ இயர்’ போதையில் வண்டி ஓட்டும் பெண்கள் : சென்னையில் முதன்முறையாக தனிப்படை அமைத்து அதிரடி!

 

‘நெருங்கும் நியூ இயர்’  போதையில் வண்டி ஓட்டும் பெண்கள் : சென்னையில் முதன்முறையாக  தனிப்படை அமைத்து அதிரடி!

இந்த வாகனங்கள் முதற்கட்டமாக திநகர் மற்றும் பாண்டிபஜார் பகுதிகளில்  விரிவுபடுத்தப்படவுள்ளது.

சென்னை மெரினா கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை  அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்துக்குக் காவலர்களுக்கு  3 நவீன ‘இ பைக்’குகள் அளிக்கப்பட்டுள்ளது. 

ttn

பேட்டரி மூலம் இயங்கும் அதில் காவலர் ஒருவர் நின்று கொண்டே செல்லலாம். மேலும் அந்த பைக்கில் மைக்,  வாக்கிடாக்கி, ஒளிவிளக்குகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனத்தின் மதிப்பு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஆகும்.  இந்தியாவிலேயே முதன் முதலாக சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வாகனங்கள் 18 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் 8 மணிநேரம் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் முதற்கட்டமாக திநகர் மற்றும் பாண்டிபஜார் பகுதிகளில்  விரிவுபடுத்தப்படவுள்ளது.

ttn

அதேபோல் குடித்து விட்டு வாகனம் ஓட்டும்  பெண்களை பிடிக்க சென்னையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெண் உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு தலைமை காவலர், இரண்டு காவலர்கள் உள்ளனர்.  இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்க போகிறது. அன்றிரவு   இரவில் ஆண்களும் பெண்களும் குடித்துவிட்டு சாலைகளில்  வண்டி ஓட்டி  செல்வார்கள். அதை தடுக்கும் வகையில்  இந்த  நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.