நெருங்கும் தீபாவளி : அதிகாலை 2 மணிவரை கடைகள் திறந்து வைக்க அனுமதி!

 

நெருங்கும் தீபாவளி : அதிகாலை 2 மணிவரை கடைகள் திறந்து வைக்க அனுமதி!

பண்டிகை காலங்களில்  கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கும் நேரம் வழக்கத்தை விட கூடுதலாகவே இருக்கும்

மதுரை: தீபாவளிக்கு முந்தைய  இருந்து நாட்களுக்கு அதிகாலை 2 மணி வரை கடைகளை  நடத்திக் கொள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்துள்ளது. 

பொதுவாகவே இரவு நேரங்களில் கடைகள்  திறந்து வைப்பதில்லை. பாதுகாப்பு மற்றும் ஊழியர்களிடம் பணிச்சுமையைக் கருதியும்  காலவரம்பு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பண்டிகை காலங்களில்  கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கும் நேரம் வழக்கத்தை விட கூடுதலாகவே இருக்கும். குறிப்பாக ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதும். 

diwali

இந்நிலையில்  தீபாவளி பண்டிகை வர இன்னும் ஒருவார காலமே இருப்பதால் இரவிலும் கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் ஏராளமான வியாபாரிகள் வட்டிக்குக் கடன் வாங்கி ஆடைகளை விற்பனை செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

hc

இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம்,  தீபாவளிக்கு முந்தைய  இருந்து நாட்களுக்கு அதிகாலை 2 மணி வரை கடை நடத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. மேலும், முறையான பாதுகாப்பு, ஷிப்ட் முறையில்  பணியாளர்களை நியமிப்பது என வியாபாரிகள் முறையாகச் செயல்பட வேண்டும் என்றும் அதற்கேற்ப காவல்துறையினரும் வரம்புகளை வகுத்துக் கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதனால் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.