நெருங்கும் உள்ளாட்சி தேர்தல்: அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு..

 

நெருங்கும் உள்ளாட்சி தேர்தல்: அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு..

தேர்தல் நெருங்கி விட்டதால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அதிகம் வைத்திருக்கும் மாவட்டங்களில்  இருந்து, வாக்கு இயந்திரங்கள் தேவையான மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியுள்ளது. 

2016 முதல் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப் பட வில்லை. சுமார் 2 ஆண்டுகளுக்கு மேல்  தள்ளிப் போனதால் தி.மு.க உள்ளிட்ட பெரிய கட்சிகள் இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப் பட வேண்டும் என்று உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தன. அதனை விசாரித்த நீதி மன்றம், இந்த ஆண்டு நவம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் நடத்தப் படும் என்று அறிவித்தது. 

Election

இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், கட்சிகள் தங்களின் சின்னங்களை பதிவு செய்வதற்கான விதிமுறைகளை வெளியிடப் பட்டுள்ளது.

மேலும், தேர்தல் நெருங்கி விட்டதால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அதிகம் வைத்திருக்கும் மாவட்டங்களில்  இருந்து, வாக்கு இயந்திரங்கள் தேவையான மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியுள்ளது.