நெருங்கியது தீபாவளி ! ஆர்டர் கிடைக்கவில்லை என ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் வேதனை !

 

நெருங்கியது தீபாவளி ! ஆர்டர் கிடைக்கவில்லை என ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் வேதனை !

பொருளாதார மந்த நிலை காரணமாக மோட்டார் வாகன உற்பத்தில் தொழிலில் ஏற்பட்ட சிக்கல் அடுத்ததாக ஆடைத் தொழிலையும் தொத்திக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொருளாதார மந்த நிலை காரணமாக மோட்டார் வாகன உற்பத்தில் தொழிலில் ஏற்பட்ட சிக்கல் அடுத்ததாக ஆடைத் தொழிலையும் தொத்திக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Dress production

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் அனைத்து வயதினருக்கான ஆயத்த ஆடைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிலில் 3,000 பேர் நேரடியாகவும், 2,000-த்திற்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் தொழில் புரிந்து வருகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களும் செயல்பட்டுவருகிறது. ஆண்களுக்கான ஒரு சட்டை தயாரிக்க கட்டிங் மாஸ்டர், செக்கிங் மாஸ்டர், அயர்னிங் மாஸ்டர், தையல் தொழிலாளி, பட்டன் வைப்பவர் என 13 பேர் வரை வேலை செய்கிறார்கள்.

Factories

காட்டன், நைலான், டெரிகாட்டன் சட்டைகள் 150 ரூபாய் முதல் 350 ரூபாய் வரையிலான விலையில் தயாரிக்கப்படுகின்றன.ஆடைகள் இங்கிருந்து கேரளா உட்பட தமிழ்நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் பொருளாதார மந்தநிலை காரணமாக, தீபாவளிக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் எதிர்பார்த்த ஆர்டர் வரவில்லை என ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வழக்கமாக தீபாவளிக்கு 2 மாதங்களுக்கு முன்னரே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து வியாபாரிகள் ஆடைகளை வாங்கிச் செல்வார்கள்.

Dress factories

ஆனால் இம்முறை போதிய ஆர்டர் இல்லாததன் காரணமாக தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாத நிலை உள்ளது. 60 சதவீத தொழிலாளர்கள் வேலை இல்லாமல் வேறு ஊர்களுக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். கடந்த தீபாவளிக்கு கிடைத்த ஆர்டர் கூட இந்தாண்டு கிடைக்கவில்லை என கூறும் ஆலை உரிமையாளர்கள், அக்டோபர் மாத தொடக்கத்திலாவது ஆர்டர் வரும் என்று நம்புவதாக தெரிவிக்கின்றனர்.