நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! 

 

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! 

முன்னாள் பிரதமர் நேருவால் 1956 ஆம் ஆண்டு என்எல்சி கொண்டு வரப்பட்டது. தற்போது அங்கு 5 அனல் மின் நிலைய உற்பத்தி யூனிட்கள் உள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு மொத்தமாக 4240 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய அனல்மின் நிலையமான, இந்த நிறுவனம் மூலம் வருடம் முழுக்க 30 மில்லியன் டன் லிக்னைட் எடுக்கப்படுகிறது. மேலும் அங்குள்ள 51 காற்றாலை மூலம் 1.50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் சோலார் மூலம் 140 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நெய்வேலி என்.எல்.சி
இதற்கிடையில் நெய்வேலி அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில் பாய்லர் வெடித்து பயங்கார தீ விபத்து ஏற்பட்டது. இதில்  அங்கு பணியில் இருந்த 8தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தின் காரணமாக அனல்மின் நிலையத்தில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நெய்வேலி என்.எல்.சியின் 2 ஆவது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் காயமடைந்த 8 பேரில் ஒருவர் உயிரிழந்தார்.