‘நெத்திலி புகழ்’ காஞ்சிபுரம் ராமு மெஸ்!

 

‘நெத்திலி புகழ்’ காஞ்சிபுரம் ராமு மெஸ்!

காஞ்சிபுரத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான கோவில்களுக்கு மட்டுமல்ல நல்ல சாப்பாட்டுக்காகவும் விசிட் செய்ய வேண்டிய ஊர்.காலை நேரத்தில் பல வீட்டுத் திண்ணைகளே டிஃபன் கடை அவதாரம் எடுத்திருக்கும்.மாலை அதே திண்ணைகளில் சூடான பஜ்ஜி போண்டா கிடைக்கும்.அப்படிப்பட்ட ஊரில் ராமு மெஸ் 34 வருடமாக சிறப்பாக நடந்துகொண்டு இருக்கிறது. 

காஞ்சிபுரத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான கோவில்களுக்கு மட்டுமல்ல நல்ல சாப்பாட்டுக்காகவும் விசிட் செய்ய வேண்டிய ஊர்.காலை நேரத்தில் பல வீட்டுத் திண்ணைகளே டிஃபன் கடை அவதாரம் எடுத்திருக்கும்.மாலை அதே திண்ணைகளில் சூடான பஜ்ஜி போண்டா கிடைக்கும்.அப்படிப்பட்ட ஊரில் ராமு மெஸ் 34 வருடமாக சிறப்பாக நடந்துகொண்டு இருக்கிறது. 

காஞ்சிபுரம் தேரடி அருகில் உள்ள தும்பவனத் தெருவில் இருக்கும் இந்த உணவகத்துக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது,அதுதான் எல்லம்மா மெஸ்.எல்லம்மா ராமுவின் தாய்.எல்லாமாவுக்கு சமையலில் குரு அவருடைய மாமியார்.

mess

இப்போது ராமு மெஸ்ஸில் 23 பெண்கள் வேலை செய்கிறார்கள். முழுக்க முழுக்க பெண்களே பணியாற்றும் உணவகம் இது.காலை 6.30க்கு தொடங்கி மாலை 4.30 வரை நடக்கிறது. சைவம் அசைவம் இரண்டும் உண்டு.பொதுவாக ஒரு உணவகத்தில் சைவம் சிறப்பாக இருக்கும்,அல்லது,அசைவம் சிறப்பாக இருக்கும்.ஆனால் ராமு மெஸ் அதற்கு விதி விலக்கு.இங்கு கிடைக்கும் ஒரு ஸ்பெஷல் ஐட்டம் நெத்திலி வறுவல்.சும்மா மசாலா தடவி எண்ணெயில் பொரிக்காமல் மொச்சை,வெங்காயம் தக்காளி சேர்த்து செய்யப்படும் நெத்திலிதான் இந்த உணவகத்தின் சூப்பர் ஸ்டார்

fish

.இவர்கள் எதையும் எண்ணையில் பொரிப்பதில்லை.சிக்கன் 65 மட்டும்தான். மீன்கூடத் தவா ஃபிரைதான்.இங்கே எல்லாமாவும் 23 சிஷ்யைகளும் வைக்கும் எல்லா குழம்புகளுமே சுவையாக இருந்தாலும்,கருவாட்டுக் குழம்பும், சைவத்தில் மோர்குழம்பும் நிறைய ரசிகர்களை கொண்டிருக்கின்றன. 

பெண்களே சமைத்துப் பெண்களே பரிமாறுகிறார்கள் என்பதாலும் வழக்கமான ஹோட்டல் மசாலா வாசனையே இல்லை என்பதாலும் ஏதோ உறவினர்கள் வீட்டு விருந்துச் சாப்பாடு போல இருக்கிறது. சைவத்திற்கு இவர்கள் புளிச்சக் கீரையும் அரைக் கீரையும் சேர்த்து செய்யும் கடையல் ஒன்றே போதும் இவர்களின் கைமணத்திற்கு உதாரணம் சொல்ல.

fry

விலையும் மிகவும் குறைவுதான்.ஏ.சியில் சாப்பாடு 60 ரூபாய்,வெளியே 50 ரூபாய், அன்லிமிட்டட்.எந்த அசைவ ஐட்டமும் 100 ரூபாயைத் தாண்டுவதில்லை. முக்கியமாக இங்கு பரிமாறப்படும் ரசத்தை மறக்கவே மாட்டீர்கள். அடுத்த முறை காஞ்சிக்குப் போகும்போது ராமு மெஸ்ஸுக்கு ஒரு விசிட் அடிக்க மறக்காதீர்கள்.