நெத்தியடி கொல குத்து..பாம்ப அடிச்சா தலையில தான் அடிப்போம்; மன்சூர் அலிகான் தடாலடி!

 

நெத்தியடி கொல குத்து..பாம்ப அடிச்சா தலையில தான் அடிப்போம்; மன்சூர் அலிகான் தடாலடி!

நாம் தமிழர் கட்சி சார்பாக நடிகர் மன்சூர் அலிகான் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்

திண்டுக்கல்: நாம் தமிழர் கட்சி சார்பாக நடிகர் மன்சூர் அலிகான் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

வேட்புமனுத் தாக்கல்:

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அந்த வகையில்,  திண்டுக்கல் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். அதையொட்டி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான வினய்யிடம் தனது வேட்பு மனுவை மன்சூர் அலிகான் இன்று தாக்கல் செய்தார்.

mansoor ali khan

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழன்தான் பிரதமராக வரணும். நான் எம்.பி ஆனா சேரில் உட்கார்ந்து சீட்டு தொடச்சிட்டு வர மாட்டேன். எழுந்து நின்று கேள்வி கேட்பேன் என்றார்.

தாமரை கூட தேசிய மலர் தானே:

நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், காளை மாடு கேட்டோம் சாரி அது உயிரோட இருக்குது தர மாட்டோம் என்று சொல்லி விட்டனராம். மயில் கேட்டோம் சாரி அது தேசிய பறவை கொடுக்க மாட்டோம் என்று சொல்லி விட்டனராம். ஏன் தாமரை கூட தேசிய மலர் தானே என்று கேட்டதற்கு, அது முன்னாடியே கொடுத்து விட்டோம் என்றார்களாம். ஸோ; உயிரோட இருக்குறது எதையும் கொடுக்க மாட்டேன்னு, விவசாயிய தூக்கி கொடுத்துட்டாங்க. மத்திய அரசு, மாநில அரசோட பார்வையில விவசாயி செத்து போயிட்டான்னு சொல்லிட்டாங்க. நாங்க விவசாயிக்கு உயிர் கொடுப்போம். நாங்க தான் விவசாயி, வாக்காளர் தான் விவசாயி. விவசாயி இல்லாவிடில் இந்தியா இல்லை. விவசாயிகளின் ஆட்சி தான் இனி மத்தியிலும், மாநிலத்திலும் நடக்கும் என்றார்.

பாம்ப அடிச்சா தலையில தான் அடிப்போம்:
mansoor ali khan

உங்களது தேர்தல் வியூகம் எப்படி இருக்கும் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நாங்க கணக்கு போட்டு பார்குறதுலாம் இல்லை. நெத்தியடி கொல குத்து பாம்ப அடிச்சா தலையில தான் அடிப்போம். எந்த பணக்காரனுக்காகவும் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. மக்களை பணக்காரர்களாக மாற்றத்தான் நாங்கள் ஆட்சிக்கு வருகிறோம் என்றார்.

எந்த பணக்காரர்கள் எங்கு போய் கொட்டுகிறார்கள் என தெரியவில்லை என குறிப்பிட்ட மன்சூர் அலிகான், தேர்தல் விதிமுறைகளால், அப்பாவி வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள் என வேதனை தெரிவித்தார்.

பணநாயகமாக மாறி விட்ட ஜனநாயகம்:
mansoor alikhan

மேலும் பேசிய அவர், தேர்தல் ஆணையம் நன்றாக வேலை பார்கிறார்கள் அவர்களை நம்பி தான் நான் தேர்தலில் இறங்கியுள்ளேன். பணநாயகமாக மாறி விட்ட ஜனநாயகத்தை உண்மையான மக்கள் ஆட்சியாக நாங்கள் மாற்றுவோம் என்றார்.

முகிலனுக்கு அரசே பொறுப்பு:

mugilan

சமூக செயற்பாட்டாளர் முகிலன் குறித்த கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான்,  முகிலனை கண்டுபிடிக்க வேண்டும். அது மிகப்பெரியா சவால். ஸ்டெர்லைட் வேதாந்தாவை தான் உள்ள பிடிச்சு வைக்கணும். இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். முகிலன் தனி மனிதன் கிடையாது. ஏழு கோடி தமிழர்களின் பிரதிபலிப்பு. தூத்துக்குடியில் நடந்தது அப்பட்டமான படுகொலை. அதற்கான சாட்சியங்களை முகிலன் காண்பித்தார். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருகின்றனர். அதனால், வரவிருக்கும் தேர்தலில் தக்க பதிலடி கிடைக்கும் என்றார்.