நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளுக்கே திரும்ப வரும் பார்கள்!

 

நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிகளுக்கே திரும்ப வரும் பார்கள்!

கர்நாடகாவில் நடக்கவிருந்த சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தும், தொடர்ந்து வந்த நாடாளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டும், பழைய இடத்திற்கே திரும்ப செல்லும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்பதான் எலெக்சன் முடிஞ்சிருச்சி இல்ல!

நெடுஞ்சாலைகள் செல்லும் இடங்களில் இருந்து 1 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மதுபான கடைகள் மற்றும் விடுதிகளை நடத்துவதற்கு 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. நல்லமுறையில் சாலையில் வண்டி ஓட்டுச்செல்பவர்களையும் சபலப்படுத்தி, குடிக்கவைத்து, விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும்பொருட்டு மேற்படி தடை விதிக்கப்பட்டது. கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தபட்டதால், கர்நாடக மாநிலத்தில் மட்டும் 1,667 பார்கள் இடமாற்றம் செய்யப்பட்டன. பிறகு, மதுபான கடை உரிமையாளர்களின் கோரிக்கைக்கு இணங்க, 1 கிலோமீட்டர் சுற்றளவு என்பதை, 500 மீட்டராக குறைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

Bar

இந்த புது உத்தரவு கிடைக்கபெற்றதும், கர்நாடகாவில் மட்டும் 250 பார்கள் திரும்பவும் பழைய இடத்துக்கே அதாவது நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதிக்கே செல்ல இருக்கின்றன. இதற்கான அனுமதியை கர்நாடக கலால்துறை ஆணையர் வழங்கியுள்ளார். ஒரு கிலோமீட்டர் தூரத்தை, 500 மீட்டராக குறைத்துக்கொள்ளும் அனுமதியை உச்சநீதிமன்றம் முன்னமே வழங்கிவிட்டது. ஆனால், கர்நாடகாவில் நடக்கவிருந்த சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தும், தொடர்ந்து வந்த நாடாளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டும், பழைய இடத்திற்கே திரும்ப செல்லும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்பதான் எலெக்சன் முடிஞ்சிருச்சி இல்ல!