நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாரா நலமாக உள்ளாரா?…வாங்க தெரிஞ்சுக்கலாம்…

நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாரா நலமாக உள்ளாரா?…வாங்க தெரிஞ்சுக்கலாம்…

நமது சச்சின் டெண்டுல்கருக்கு இணையாக உலகம் முழுக்க தீவிர பக்தர்கள் கொண்டவர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் பிரையன் லாரா. நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி பதட்டத்தை உண்டாக்கியிருந்த நிலையில் தான் நலமாக உள்ளதாக அவரே தகவல் தெரிவித்திருக்கிறார்.

brainlara

உலக கோப்பைக் கிரிக்கெட்  போட்டிகள் முதல்பாதி முடிவடைந்த நிலையில் அடுத்தடுத்த மேட்சுகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.  இந்தியாவில் ஒளிபரப்பப்படும் கிரிக்கெட் போட்டிகளில் விமர்சனம் செய்யவும், போட்டிக்கிடையே விவாதம் செய்யவும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை சேர்ந்த முன்னாள் வீரரான பிரைன் லாரா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஆனார். அதன்படி உலக கோப்பை தொடர் முடியும் வரை இந்தியாவில் இருந்து போட்டியை வர்ணனை மற்றும் விவாதம் போன்று பல நிகழ்ச்சிகளை அவர் செய்வதற்காக இந்தியாவில் தங்கி உள்ளார்.

brainlara

இந்நிலையில் நேற்று மும்பயில்  படப்பிடிப்பின்போது நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது. அச்செய்தி கிரிக்கெட் ரசிகர்களை உலுக்கியிருந்த நிலையில் தனதூடல்நலம் குறித்து லாரா ஒரு செய்தி அனுப்பியுள்ளார். அதில்  ”நேற்றுமுன்தினம் ஜிம்மில் வழக்கத்தை விட அதிக அளவு உடற்பயிற்சி செய்ததால் மார்பின் கீழே திடீரென ஒரு அழுத்தத்தை உணர்ந்தேன். இதன் காரணமாக எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே மும்பை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையால் தற்போது நலமாக உள்ளேன். விரைவில் மேற்கிந்திய தீவுகளுக்கு திரும்பி முழு உடல் நலத்துடன் இந்தியா திரும்ப வருவேன்” என்று தனது ரசிகர்களுக்கு நல்ல செய்தியை அனுப்பி ஆறுதல் படுத்தியுள்ளார் லாரா.