நூலிழையில் உயிர் தப்பிய பாஜக எம்.பி- வைரலாகும் வீடியோ

 

நூலிழையில் உயிர் தப்பிய பாஜக எம்.பி- வைரலாகும் வீடியோ

பாஜக கட்சியின் எம்.பியும் மடாதிபதியுமான பாலக்நாத், பயணித்த ஹெலிகாப்டர் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழது காற்றில் சுழன்றுக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

பாஜக கட்சியின் எம்.பியும் மடாதிபதியுமான பாலக்நாத், பயணித்த ஹெலிகாப்டர் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழது காற்றில் சுழன்றுக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

பாலக்நாத், ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டுள்ளார். அப்போது அவர் பயணித்த ஹெலிகாப்டர், தரையிலிருந்து மேலெழும்பி பறக்க முயன்ற சில விநாடிகளிலேயே, தனது கட்டுப்பாட்டை முழுவதுமாக இழந்து காற்றில் சுற்றிச் சுழன்று நீண்ட நேரமாக அலைபாய்ந்தபடியே பறந்துக் கொண்டிருந்தது. இதையடுத்து மிகப் பெரும் போராட்டத்திற்கு பிறகு, ஹெலிகாப்டரை தன் கட்டுப்பாட்டுக்குள் பைலட் கொண்டு வந்தார். இந்த சம்பவத்தில் பாஜக எம்.பி. நூலிழையில் உயிர்தப்பினார்.