நீ தாரளமா வெளியில நடமாடலாம்… போ..! மனித உரிமை பெற்ற ஒரங்குட்டான் விலங்கு காட்சியகத்தில் இருந்து விடுதலை!!

 

நீ தாரளமா வெளியில நடமாடலாம்… போ..! மனித உரிமை பெற்ற ஒரங்குட்டான் விலங்கு காட்சியகத்தில் இருந்து விடுதலை!!

அர்ஜென்டினா நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு ஓரங்குட்டான் ஒன்றிற்கு ‘மனிதர் அல்லாத ஆள்’ என்ற தகுதியை வழங்கியதுடன், மனிதர்களுக்கு உள்ளதைப் போன்ற சட்ட மற்றும் சுதந்திர உரிமைகளையும் வழங்கியது. இதையடுத்து அந்த ஓரங்குட்டான் அந்நாட்டு வனவிலங்கு பூங்காவிலிருந்து வெளியேற்றப்பட்டது.

அர்ஜென்டினா நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு ஓரங்குட்டான் ஒன்றிற்கு ‘மனிதர் அல்லாத ஆள்’ என்ற தகுதியை வழங்கியதுடன், மனிதர்களுக்கு உள்ளதைப் போன்ற சட்ட மற்றும் சுதந்திர உரிமைகளையும் வழங்கியது. இதையடுத்து அந்த ஓரங்குட்டான் அந்நாட்டு வனவிலங்கு பூங்காவிலிருந்து வெளியேற்றப்பட்டது. சாண்ட்ரா எனப் பெயரிடப்பட்ட அந்த ஓரங்குட்டானுக்கு தற்போது 33 வயதாகிறது. அந்த ஓரங்குட்டான் தற்போது புளோரிடா காட்டுக்குள் சென்றுள்ளது.

Orangutan

சாண்ட்ராவிற்கு மனித உரிமை வழங்கிய நீதிபதி எலினா, “விலங்குகளுக்கும் உணர்வுகள் உள்ளது. அதனை நாம் மதிப்பது நமது கடமை”என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ஜெர்மனியில் பிறந்த சாண்ட்ரா 1995 ஆம் ஆண்டு, அர்ஜென்டினாவிற்கு அழைத்துச்செல்லப்பட்டது. 1999 ஆம் ஆண்டு சாண்ட்ராவிற்கு ஒரு மகள் பிறந்தாள். அந்த குட்டி ஓரங்குட்டான் தற்போது சீனாவிலுள்ள வனவிலங்கு பூங்காவிலுள்ளது.