‘நீயெல்லாம் எதுக்கு பொறந்த கும்கி’ : நெட்டிசன் பதிவால் கடுப்பான பிக் பாஸ் பிரபலம்!

 

‘நீயெல்லாம் எதுக்கு பொறந்த கும்கி’ : நெட்டிசன்  பதிவால் கடுப்பான பிக் பாஸ் பிரபலம்!

போட்டியின் போது  அவர் மீது பல்வேறு விமர்சனங்கள்  வைக்கப்பட்டது. ஆனால்  அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் கடந்து சென்றார்

பிக் பாஸ் முதல் சீசனில்  ஓவியா, ஆரவ்,  சினேகன், காயத்ரி, ஆர்த்தி, சுஜா, வையாபுரி, சக்தி, கணேஷ் வெங்கட் ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். அதில் ஆர்த்தி அடிக்கடி ஜூலியிடம் வம்பிழுத்து வந்தார். மேலும் போட்டியின் போது  அவர் மீது பல்வேறு விமர்சனங்கள்  வைக்கப்பட்டது. ஆனால்  அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் கடந்து சென்றார்

bb

இந்நிலையில் ஆர்த்தி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது அவர் விஜய் ரசிகர் ஒருவரின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ளார்.

harati

அந்த ட்வீட் இப்போது அல்ல கடந்த 2017 ஆம் ஆண்டு ஆர்த்தி பிறந்தநாளன்று சொல்லப்பட்டது. அதில் ‘நீயெல்லாம் எதுக்கு பொறந்த கும்கி’ என்று மோசமாக ட்வீட் செய்திருந்தார்.

 

அதற்கு தற்போது பதிலளித்த ஆர்த்தி, உங்கள மாதிரி 420 கேடிய அடக்கத்தான்’ என்று பதிலடி கொடுத்துள்ளார். இதை கண்ட ஆர்த்தியை பாராட்டியும் ட்வீட் செய்த விஜய்  ரசிகரை திட்டியும் வருகின்றனர்