நீதிமன்றம் என்னை குற்றவாளி என்று சொல்லவில்லை: முதல்வர் பழனிசாமி அதிரடி

 

நீதிமன்றம் என்னை குற்றவாளி என்று சொல்லவில்லை: முதல்வர் பழனிசாமி அதிரடி

உயர் நீதிமன்றம் என்னை குற்றவாளி என்று சொல்லவில்லை என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

விழுப்புரம்: உயர் நீதிமன்றம் என்னை குற்றவாளி என்று சொல்லவில்லை என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுக கட்சியின் 47-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அக்கட்சியின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு அதிமுக கொடியை ஏற்றினார். மேலும் 47 கிலோ கேக்கை வெட்டி தொண்டர்களுக்கு அளித்தார்.

அதன்பிறகு கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தை 28 ஆண்டு காலம் ஆட்சி செய்த அதிமுக அரசு ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலை ஒப்பந்த வழக்கு உள்ளிட்ட எந்த வழக்கையும் நான் சந்திக்கத் தயார்.

அதிமுகவை மிரட்டி பார்க்கின்றனர். எங்களுக்கு மடியில் கனம் இல்லை. வழியில் பயம் இல்லை. உங்களுக்குத்தான் மடியில் கனம் இருக்கிறது வழியில் பயம் உள்ளது. புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டிய விவகாரத்தில் ஊழல் நடந்தது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டபோது நீங்கள் நீதிமன்றம் சென்றீர்கள். ஆனால் என் மீது நீங்கள் புகார் கொடுத்தீர்கள். நாங்கள் நீதிமன்றம் செல்லவில்லை.

நெடுஞ்சாலை ஒப்பந்த வழக்கில் நீதிமன்றம், அவர் அதிகாரத்தில் இருக்கிறார், எனவே விசாரணை சரியாக நடக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. குற்றவாளி என்று கூறவில்லை. மடியில் கனமில்லாததால் எந்த வழக்குகளையும் சந்திக்க தயார்.

திமுக-வில் வாரிசு அரசியல் இருப்பதாகவும், அதிமுக-வில் சாதாரணத் தொண்டனுக்கும் பதவிகள் வழங்கப்பட்டது. திமுக-வில் கருணாநிதி, அவருக்கு பின்னர் மு.க.ஸ்டாலின், தற்போது உதயநிதி வந்துள்ளார். இது வாரிசு அரசியல். எனவே திமுக ஒரு கட்சி இல்லை. கம்பெனியாக்கிவிட்டார்கள் என்றார்.