நீதிமன்றத்துக்குள் குற்றவாளி சுட்டுக்கொலை… இங்கே இல்லை உ.பி-யில்!

நீதிமன்றத்துக்குள் குற்றவாளி சுட்டுக்கொலை… இங்கே இல்லை உ.பி-யில்!

உத்தரப்பிரதேசத்தில் கொலைக் குற்றவாளி ஒருவர் நீதிமன்றத்துக்குள்ளேயே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஈஷான் அகமது. பகுஜன் சமாஜ் கட்சியில் நிர்வாகியாக இருந்த இவரையும் இவரது உறவினர் சதாப் என்பவரையும் கடந்த மே மாதம் மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து ஷாநவாஸ் மற்றும் ஜாபர் என்பவர்கள் தாங்கள்தான் கொலையை செய்தோம் என்று டெல்லி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் இருவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

court

ஈஷான், சதாப் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு பிஜ்னோர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கு விசாரணைக்காக குற்றவாளிகள் ஷாநவாஸ் மற்றும் ஜாபர் ஆகியோர் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டனர். வழக்கு விசாரணையை பார்வையிடும் பார்வையாளர் போல சுட்டுக்கொல்லப்பட்ட ஈஷானின் மகன் மற்றும் அவனது நண்பர்கள் அமர்ந்திருந்தனர். விசாரணை தொடங்கியதும் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஈஷானின் மகன் மற்றும் அவனது நண்பர்கள் மறைத்த வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஷாநவாஸ் மற்றும் ஜாபர் மீது சுட்டனர். இதில், ஷாநவாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

court

நீதிமன்றத்துக்குள் நீதிபதி முன்னிலையில், குற்றவாளி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உ.பி-யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதாக காவல்துறை அதிகாரி உள்பட 18 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.