நீட் புகாரில் சிக்கிய இடைத்தரகர் கோவிந்தராஜ் ! தீவிர விசாரணைக்கு பின் விடுவித்தது சிபிசிஐடி !

 

நீட் புகாரில் சிக்கிய இடைத்தரகர் கோவிந்தராஜ் ! தீவிர விசாரணைக்கு பின் விடுவித்தது சிபிசிஐடி !

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் விசாரணை வளையத்திற்கு கொண்டுவந்த இடைத்தரகர் கோவிந்தராஜை விசாரணைக்கு பின் சிபிசிஐடி விடுவித்துள்ளது.

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் விசாரணை வளையத்திற்கு கொண்டுவந்த இடைத்தரகர் கோவிந்தராஜை விசாரணைக்கு பின் சிபிசிஐடி விடுவித்துள்ளது.

 

சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து உதித்சூர்யா என்ற மாணவன் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உதித்சூர்யா மட்டுமின்றி மேலும் பல மாணவர்கள் இதேபோல் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக செய்திகள் வெளியானது.

Neet

இதனை அடுத்து கோவை, சேலம் உள்பட பல பகுதியில் உள்ள மாணவர்கள் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட இடைத்தரகர்களை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். கேரளா உள்பட நாடு முழுவதும் இதற்கென பல இடைத்தரகர்கள் இருப்பதாகவும், அவர்களை பிடித்தால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என்றும் சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்து இருந்தன.

நீட் தேர்வு ஆள்மாறட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள உதித்சூர்யா, பிரவின், ராகுல், இர்பன் மற்றும் அவர்களது தந்தைகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் ஆள்மாறாட்டம் செய்வதற்கு இடைத்தரகராக செயல்பட்டதாக கோவிந்தராஜ் என்பவர் விசாரணை வளையத்திற்கு வந்தார்.

கோவிந்தராஜிடம் தேனி அலுவலகத்தில் வைத்து நேற்று இரவு முதல் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வந்தது. கோவிந்தராஜை விடுவித்த சிபிசிஐடி போலீஸ் தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.