நீட் தேர்வில் வேறேதும் ஊழல் நடைபெற்றுள்தா…. மொத்த மாணவர்களையும் விசாரிக்க உத்தரவு!

 

நீட் தேர்வில் வேறேதும் ஊழல் நடைபெற்றுள்தா…. மொத்த மாணவர்களையும் விசாரிக்க உத்தரவு!

சென்னை கீழ்ப் பாக்கம் அரசு கல்லூரி முதல்வர் வசந்தா தலைமையில் 150 மாணவர்களின் நீட் தேர்வு தேர்ச்சி படிவம், தற்போது உள்ள புகைப்படம் மற்றும் கலந்தாய்வின் ஒதுக்கீடு படிவம் உள்ளிட்டவைகளை சோதனை செய்து அவர்களிடமிருந்து கையெழுத்தும் பெறப் பட்டுள்ளன. 
 

சில நாட்களுக்கு முன் நீட் தேர்வில் உதித் சூர்யா என்ற மாணவர் வேரோரு நபரை வைத்து ஆள் மாறாட்டம் செய்து  தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது தெரிய வந்தது. இனிமேல் அத்தகைய குற்றங்கள் நிகழாமல் இருக்க, ஓரிரு நாட்களுக்குள் முதலாம் ஆண்டு மாணவர்களின் சான்றிதழ்களை சரிப்பார்த்து மருத்துவ கல்லூரி இயக்குனரகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டது.

NEET

அதன் படி, சென்னை கீழ்ப் பாக்கம் அரசு கல்லூரி முதல்வர் வசந்தா தலைமையில் 150 மாணவர்களின் நீட் தேர்வு தேர்ச்சி படிவம், தற்போது உள்ள புகைப்படம் மற்றும் கலந்தாய்வின் ஒதுக்கீடு படிவம் உள்ளிட்டவைகளை சோதனை செய்து அவர்களிடமிருந்து கையெழுத்தும் பெறப் பட்டுள்ளன. 

Certificate verification

 
அதே போன்று, ஸ்டாலின் அரசு மருத்துவ கல்லூரி, ஓமந்தூர் மருத்துவ கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் சுமார் 350 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிப் பார்க்கப் பட்டன. மேலும், விடுமுறையில் உள்ள மாணவர்களின் சான்றிதழ்களும் விரைவில் சோதனை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகின்றன.