நீட் தேர்வில் வழக்கில் கைதான இரு மாணவர்களுக்கு ஜாமீன் : சென்னை உயர்நீதி மன்றம்

 

நீட் தேர்வில் வழக்கில்  கைதான இரு மாணவர்களுக்கு ஜாமீன் : சென்னை உயர்நீதி மன்றம்

மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு பிரவீன் மற்றும் ராகுலுக்கு ஜாமீன் வழங்க நீதிபதிகள் ஒப்புதல் அளித்தனர்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக உதித் சூர்யா என்ற மாணவர் முதன்முதலில் கைது செய்யப்பட்டார். அம்மாணவன் அளித்த வாக்குமூலத்தின் படி வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த  பிரவீன், ராகுல் உட்பட நான்கு மாணவர்கள்  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கைது செய்யப்பட்டனர். அதனையடுத்து உதித் சூர்யாவிற்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. பிரவீன் மற்றும் ராகுல் ஆகிய இரு மாணவர்களும், தங்களின் மீது இருப்பது பொய்யான வழக்கு என்றும் எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், கைதுசெய்யப்பட்ட அந்த இரு மாணவர்களின் தந்தைகளும் ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தனர். 

NEET

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்ட இவர்கள் 4 பேரின் ஜாமீன் மனுவும் இன்று உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு பிரவீன் மற்றும் ராகுலுக்கு ஜாமீன் வழங்க நீதிபதிகள் ஒப்புதல் அளித்தனர். மேலும், அவ்விரு மாணவர்களின் தந்தைகள் அளித்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள் ‘தந்தைகளின் தூண்டுதலால் தான் மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளனர்’ என்று கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.