நீட் தேர்வில் இந்த முறை 1000 மாணவர்கள் தேர்ச்சி பெறுவர் : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதி !

 

நீட் தேர்வில் இந்த முறை 1000 மாணவர்கள் தேர்ச்சி பெறுவர் : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதி !

இந்த ஆண்டு குறைந்தது 1000 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் நிலை உருவாகும் என்று அமைச்சர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். 

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலும், வட மாநில மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாகவும், தமிழக மாணவர்கள் மிகக் குறைவாக அளவில் தேர்ச்சி பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதே போல, தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் மற்ற மாநிலங்களை விடக் குறைவாகவே உள்ளது. இதனால், நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையங்களைத் தமிழக அரசு அமைத்துத் தந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

ttn

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்த ஆண்டு குறைந்தது 1000 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் நிலை உருவாகும் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.