நீங்க சிப்ஸ் பிரியர்களா! கேர் ஃபுல்லா இருங்க…. இப்படிக்கு ஆய்வு!!

 

நீங்க சிப்ஸ் பிரியர்களா! கேர் ஃபுல்லா இருங்க…. இப்படிக்கு ஆய்வு!!

பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் உடல் பருமன் வேகமாக அதிகரிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 

பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் உடல் பருமன் வேகமாக அதிகரிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ஊறுகாய், சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களில், சுத்திகரிக்கப்பட்ட மாவுச் சத்து, சர்க்கரை, கொழுப்பு ஆகியவை அதிகம் உள்ளன. ஆனால் அவற்றில் உடலுக்கு முக்கியமான புரதச்சத்து, விட்டமின், நார்ச்சத்து இருப்பதில்லை. பதப்படுத்தப்பட்ட உணவைச் சாப்பிடத் தொடங்கினால், அதை நிறுத்துவது கடினம். மேலும் அது, உடல் எடையை வெகுவாக, வேகமாகக் கூட்டுகிறது.

Cell Metabolism

உருளைக் கிழங்குச் சிப்ஸ், டின்னில் அடைக்கப்பட்ட உணவு, தயிர், கூல் ட்ரிங்ஸ் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டவர்களின் உடல் எடை அதிகரித்ததாக Cell Metabolism நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.  பசியைத் தூண்டும் சுரப்பிநீர் அவ்வகை உணவுகளை உட்கொள்வதால் அதிக அளவில் சுரக்கின்றன. பச்சைக் காய்கறிகள், புதிய மீன், இறைச்சி வகையை உட்கொள்வோருடன் ஒப்பிடுகையில் அவர்களது சுரப்பிநீர் அளவு அதிகரித்திருந்தது. 4 வாரங்கள் நடத்தப்பட்ட ஆய்வில் பங்கேற்றவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் உணவு சாப்பிடலாம். ஒரு தரப்பினர் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை மட்டுமே மற்றொரு தரப்பினர் புதிதாக வாங்கப்பட்ட உணவு வகைகளை மட்டுமே சாப்பிட்டனர். பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களை உட்கொண்ட குழுவினர் நாளுக்கு சுமார் 500 கலோரிகள் அதிகமாக உட்கொண்டனர். பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், ஆரோக்கியமான வகையில் தங்கள் உணவுப் பொருள்களைத் தயாரித்தால் இத்தகைய பிரச்னையிலிருந்து விடுபடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.