நீங்க கூகுள் பே உபயோக படுத்துறீங்களா?.. ரூ.202 முதல் ரூ.2020 வரை கேஷ்பேக் !

 

நீங்க கூகுள் பே உபயோக படுத்துறீங்களா?.. ரூ.202 முதல் ரூ.2020 வரை கேஷ்பேக் !

ரூ.100 வரை மட்டுமே வழங்கி வந்த கூகுள் பே புத்தாண்டு 2020 ஐ முன்னிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சமீப காலமாக அனைத்திற்கும் கூகுள் பே தான். நண்பர்களுக்குப் பணம் அனுப்புவது, போனுக்கு ரரீச்சார்ஜ் செய்து கொள்வது, கரண்ட் பில் கட்டுவது உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் உள்ளதால் இது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதை அதிகமாக உபயோகிக்கும் பயணாளிகளுக்கு அவ்வப்போது ரூ.10 முதல் 100 வரை சன்மானமாக வழங்கி வருகிறது.

 

அதே போல, இந்த ஆப்-ஐ நாம் மற்ற நபர்களுக்கு ஷேர் செய்து, அதன் மூலம் அவர்கள் கூகுள் பே பதிவிறக்கம் செய்தால் ரூ.50 ரூபாய் நமக்கு சன்மானம் கிடைக்கும். இது போல பல சலுகைகளைக் கூகுள் வழங்கி வருகிறது. 

ttn

இந்நிலையில், ரூ.100 வரை மட்டுமே வழங்கி வந்த கூகுள் பே புத்தாண்டு 2020 ஐ முன்னிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கூகுள் பேவை அதிகமாகப் பயன்படுத்தும் நபர்களுக்கு ரூ.202 முதல் ரூ.2020 முதல் பெறலாம் என்று தெரிவித்துள்ளது. இது “வெல்கம் 2020” என்று அழைக்கப்படுகிறது. அந்த பணத்தை நீங்கள் பெறுவதற்கு,  Google Pay வை பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும். அப்படி நீங்கள் செய்தால், ஒவ்வொரு முறையும் கூகுள் பே உங்களுக்கு வவுச்சர்கள் அல்லது ஸ்கிராட்ச் கார்டு வழங்கும்.

ttn

மேற்கண்ட புகைப்படத்தில் உள்ளது போல உங்களுக்கு 7 ஸ்டிக்கர்கள் கிடைக்கும். அதில் ஒவ்வொரு முறை  பணப்பரிமாற்றம் செய்யும் போதும் ஒவ்வொரு ஸ்டிக்கர் ஆக திறந்து கடைசியில் ரூ.202 முதல் ரூ.2020 வரை வெகுமதி கிடைக்கும். குறிப்பாக, ஒவ்வொரு ரீச்சார்ஜும் ரூ.98க்கு மேலாகவும், ஈ.பி பில் கட்டுவது ரூ.300க்கு மேலாகவும் இருக்க வேண்டும். அதே போல, தினமும் கூகுள் நிறுவனத்தின் விளம்பரங்களைப் பயன்படுத்தி, 5 பேருக்கு தினமும் பணம் அனுப்புவதன் மூலமாகவும், ஈ.பி பில் ஆகியன செய்வதன் மூலமாக ரூ.202 முதல் 2020 ரூபாய்வரை சன்மானமாகப் பெறலாம் என்றும் இந்த ஆஃபர் வரும் ஜனவரி 1 ஆம் தேதி வரை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.