நீங்க அப்படி நினைச்சா அதுக்கு நான் ஒன்னும் பண்ணமுடியாது: மீராவுக்கு பதிலடி கொடுத்த லாஸ்லியா

 

நீங்க அப்படி நினைச்சா அதுக்கு நான் ஒன்னும் பண்ணமுடியாது: மீராவுக்கு பதிலடி கொடுத்த லாஸ்லியா

பிக் பாஸ் சீசீசன் 3 இன் இன்றைய நிகழ்ச்சிக்கான புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசீசன் 3 இன் இன்றைய நிகழ்ச்சிக்கான புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாமினேஷன் நேற்று நடந்தது. அதில் முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்த பாத்திமா பாபு முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டார்.

losliya

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், மீரா மிதுன் மற்றும் லாஸ்லியா இருவரும் பேசி கொள்கின்றனர். நான் உங்கள பிரெண்டா பார்த்தது என் தப்பு தான் என்று மீரா சொல்ல, எனக்கு எல்லாருமே பிரெண்ட்ஸ் தான், நேகா இப்படி நெனைச்சா அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. உங்கள எல்லாரும் கஷ்டப்படுத்தும் போது, மது உங்ககூட இருந்தாங்க, ஆனா அவங்க கஷ்டப்படும் போது  நீங்க இல்லன்னு எனக்கு தோணுச்சு என்று கூறுகிறார். இதற்கு வழக்கம் போல மீரா, அவரை பேசவிடாமல் குறுக்கே பதில் பேச லாஸ்லியா அங்கிருந்து சென்றுவிடுகிறார்’ என்பது போல அந்த புரொமோ  வீடியோ உள்ளது. 

 

#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Day15 #Promo1#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/FquVaCHyOv

— Vijay Television (@vijaytelevision) July 8, 2019

கடந்த இரண்டு வாரமாக  லாஸ்லியா எந்த ஒரு விஷயத்திலும் தலையிடாமல், அவர் தன்னுடைய வேலையை பார்த்து வரும் நிலையில் மீராவுக்கு லாஸ்லியாவுக்கும் ஏற்படும் வாக்குவாதம், ஒருவேளை இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவின் குரல் ஓங்கி ஒலிக்குமா? என்ற கேள்வியை எழுப்புகிறது.