நீங்கெல்லாம் டாக்டருக்கு படிச்சு என்னம்மா பிரயோசனம்?

நீங்கெல்லாம் டாக்டருக்கு படிச்சு என்னம்மா பிரயோசனம்?

கடந்த வருடம் டாக்டர். பாயல் இந்த மருத்துவக்கல்லூரியில் உயர்படிப்புக்கு சேர்ந்த புதிதிலேயே சாதி ரீதியிலான மட்டம்தட்டல்கள் துவங்கிவிட்டன. இட ஒதுக்கீடு மூலம் மேற்படிப்புக்கு வந்தவர் பாயல் என்பது சீனியர் மூவரின் வயிற்றெரிச்சல். இது தொடர்கதையாகவும், டாக்டர்.பாயல் தன் பெற்றோரிடமும் கணவரிடமும் சொல்ல, மருத்துவமனை நிர்வாகத்திடமும் இதுகுறித்து புகார் செய்யப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி.யோ, ஐ.ஐ.எம்மோ, எந்த உயர்கல்வி நிறுவனத்தில் படிக்கும் தலித் மாணவர்கள் தற்கொலை செய்தி ஒன்றும் இந்தியாவிற்கு புதிதல்லவே! இதோ மற்றுமொரு தற்கொலை, ஒரு சின்ன மாற்றத்துடன். இந்த தடவை ஒரு மருத்துவர். எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு, மும்பையில் இருக்கும் டோபிவாலா தேசிய மருத்துவ கல்லூரியில் மேற்படிப்பு படித்துவந்த‌ டாக்டர். பாயல் தத்வி, உடன்படித்த மூன்று சீனியர் மாணவிகளால் தற்கொலைக்கு உந்தப்பட்டிருக்கிறார்.

கடந்த வருடம் டாக்டர். பாயல் இந்த மருத்துவக்கல்லூரியில் உயர்படிப்புக்கு சேர்ந்த புதிதிலேயே சாதி ரீதியிலான மட்டம்தட்டல்கள் துவங்கிவிட்டன. இட ஒதுக்கீடு மூலம் மேற்படிப்புக்கு வந்தவர் பாயல் என்பது சீனியர் மூவரின் வயிற்றெரிச்சல். இது தொடர்கதையாகவும், டாக்டர்.பாயல் தன் பெற்றோரிடமும் கணவரிடமும் சொல்ல, மருத்துவமனை நிர்வாகத்திடமும் இதுகுறித்து புகார் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி மூன்று மாணவிகளையும் கண்டித்த நிர்வாகம், அவர்களின் சீண்டலை உதாசீனப்படுத்துமாறு பாயலுக்கும் அறிவுரை கூறியுள்ளது. கடைசியாக அந்த மூன்று சீனியர் மாணவிகளும் சீண்டலை நிறுத்தியது, பாயல் தற்கொலை செய்தி கேட்டபிறகுதான்.

Payal Tadvi

 டாக்டர். ஹேமா அஹுஜா, டாக்டர். பக்தி மேஹர், டாக்டர். அங்கிதா கெண்டல்வால் என்ற அந்த மூன்று சீனியர் மாணவிகளும் தற்போதுவரை தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் மூவரும் டாக்டருக்கு படித்து கிழித்ததுபோதும், மூவரையும் கைதுசெய்து கைதி ஹேமா, கைதி மேஹர், கைதி அங்கிதா என பெயர்மாற்றம் செய்து தகுந்த தண்டனையை இந்த சட்டங்கள் நிறைவேற்றினால்தான் தலித் மாணவர்கள் தற்கொலை செய்திகள் குறையும்.