‘நீங்கள் கபட நாடகம் ஆடுகிறீர்கள்’: பாகிஸ்தான் பெண்ணின் விமர்சனத்திற்கு பிரியங்கா சோப்ரா அசத்தல் பதில்!

 

‘நீங்கள் கபட நாடகம் ஆடுகிறீர்கள்’: பாகிஸ்தான் பெண்ணின் விமர்சனத்திற்கு  பிரியங்கா சோப்ரா அசத்தல் பதில்!

பாகிஸ்தான் இளம்பெண் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகை பிரியங்கா சோப்ரா பதிலளித்துள்ளார். 

லாஸ் ஏஞ்சல்ஸ்: பாகிஸ்தான் இளம்பெண் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகை பிரியங்கா சோப்ரா பதிலளித்துள்ளார். 

இந்திய விமானி அபிநந்தனை  பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்தது. ஆனால்  இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால், அபிநந்தனை எந்த நிபந்தனையும் இன்றி விடுவித்தது. இதையடுத்து இந்திய விமானப்படைக்கு இந்தியர்கள் ஏராளமானோர் வாழ்த்துத் தெரிவித்தனர். அதில் குறிப்பாக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதற்கு யுனிசெப்-பின் நல்லெண்ண தூதராக உள்ள  நடிகை பிரியங்கா சோப்ராவும் ஜெய் ஹிந்த்  என்று கூறியிருந்தார். இதற்கு  பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் பிரியங்கா சோப்ராவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

priyanka

இந்நிலையில் சமீபத்தில்  பிரியங்கா சோப்ரா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் பெண் ஒருவர் அவரை குற்றச்சாட்டினார். அப்போது, ‘யுனிசெப், நல்லெண்ண தூதராக இருக்கும் நீங்கள், பாகிஸ்தானுக்கு எதிராக அணு ஆயுத போரை ஆதரிக்கலாமா? உங்களையும் உங்கள் படங்களையும் பாகிஸ்தானில் ரசிக்கிறோம். ஆனால், நீங்கள் அணு ஆயுத போருக்கு ஆதரவாகச் செயல்படுகிறீர்கள்? இது சரிதானா. நீங்கள் கபட நாடகம் ஆடுகிறீர்கள்’  என்று கடுமையாக விமர்சித்தார். 

 

இதையடுத்து இதற்கு பதிலளித்த பிரியங்கா,  நான்  போரை தூண்டுபவள் இல்லை. எனக்கு பாகிஸ்தானில் அதிக நண்பர்கள் இருக்கிறார்கள். எனக்கு தேசபக்தி இருக்கிறது. என்னால் யாரேனும் மனது கஷ்டப்பட்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நாம் அன்பு செலுத்தவே இங்கு இருக்கிறோம். உங்களையே வருத்திக்கொள்ள வேண்டாம். இருப்பினும் இந்த கேள்வியை  கேட்டதற்கு ரொம்ப நன்றி’ என்றார்.