நிவாரண பணிக்கு உதவ இளைஞர்கள் முன் வர வேண்டும்: நடிகர் விமல் கோரிக்கை

 

நிவாரண பணிக்கு உதவ இளைஞர்கள் முன் வர வேண்டும்: நடிகர் விமல் கோரிக்கை

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட இளைஞர்கள் முன் வர வேண்டும் என நடிகர் விமல் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட இளைஞர்கள் முன் வர வேண்டும் என நடிகர் விமல் கோரிக்கை விடுத்துள்ளார்.

சோறுடைத்த சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் தற்போது சோறில்லாமல் இருந்து வருகின்றன. கடந்த 15ம் தேதி கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலினால் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்

கஜா புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட ஏராளமானோர் நிவாரணம் வழங்கி வருகின்றனர். கஜா புயல் பாதிக்கப்பட்ட மணப்பாறை பகுதியை பார்வையிட்ட நடிகர் விமல், மின்சாரம் இல்லாமல், குடிநீர் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

கஜா புயலால் கடும் பாதிப்புக்குள்ளான 4 மாவட்டங்களில் சீரமைக்கும் பணிகளில் பிற மாவட்ட இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்த விமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.