நிவாரணம் வழங்கினோம்…. மக்கள் வாக்களிப்பார்கள்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

 

நிவாரணம் வழங்கினோம்…. மக்கள் வாக்களிப்பார்கள்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

கஜா பாதித்த மாவட்டங்களில் நிவாரண பொருட்களை வழங்கினோம். அந்த நன்றி உணர்வுடன் பொதுமக்கள் திருவாரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளரை அமோக வெற்றி பெற செய்வார்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்

விருதுநகர்: கஜா பாதித்த மாவட்டங்களில் நிவாரண பொருட்களை வழங்கினோம். அந்த நன்றி உணர்வுடன் பொதுமக்கள் திருவாரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளரை அமோக வெற்றி பெற செய்வார்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு பிறகு திருவாரூர் தொகுதி காலியாக இருந்தது. இதனால் திருவாரூருக்கு எப்போது தேர்தல் நடக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இதனைதொடர்ந்து அந்த தொகுதிக்கு வரும் ஜனவரி 28-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும்,10-ம் தேதிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திருவாரூர் தொகுதி கருணாநிதியின் சொந்த ஊர் என்பதால் இந்த தொகுதியை கைப்பற்றுவது திமுகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேசமயம் திருவாரூரை கைப்பற்றி தங்களது பலத்தை நிரூபிக்க அதிமுகவும், அமமுகவும் முனைப்பு காட்டும் என்பதால் இந்த இடைத்தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என்பதே உண்மை.

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் வரலாற்றிலேயே முதல் முறையாக 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நிவாரண பணிகளை மேற்கொண்டனர். அங்கு ரூ.1,000 கோடிக்கு அதிகமான நிவாரண பொருட்களை வழங்கினோம். அந்த நன்றி உணர்வுடன் பொதுமக்கள் திருவாரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளரை அமோக வெற்றி பெறச் செய்வார்கள் என்றார்.