நிறைமாத கர்ப்பிணியைக் காப்பாற்ற மலைப்பாதையில் மராத்தான் ஓடிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!

 

நிறைமாத கர்ப்பிணியைக் காப்பாற்ற மலைப்பாதையில் மராத்தான் ஓடிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!

நள்ளிரவு பதினோறு மணிக்கு ஆம்புலன்ஸ் வண்டியில் கர்ப்பிணியோடு தனது ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரை விட்டுவிட்டு ஓட்டம் எடுக்கிறார் ஸ்டாலின். செல்போன் டவர் கிடைக்கும்வரை நிற்காமல் ஓடியவர், டவர் கிடைத்த அடுத்த வினாடி மற்றொரு 108க்கு தகவல் தர, சைரன்கள் அலற மறுபக்கத்திலிருந்து வில்லிருந்து புறப்பட்ட அம்பென பாய்கிறது ஆம்புலன்ஸ்.

சேலம், கல்வராயன் மலைக்கிராமமான கருமந்துறையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள செம்பூர் கிராமம், பானுமதி என்பவருக்கு நிறைமாதம். இரவுநேரத்தில் வலி ஏற்பட, 108க்கு தகவல் தெரிவிக்கப்பட தனது ஆம்புலன்ஸ் வண்டி மற்றும் உதவியாளரோடு சிட்டாக பறந்துவந்தார் ஓட்டுநர் ஸ்டாலின். கர்ப்பிணி பானுமதியை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து செல்லும்போது, வரும்வழியில் மலைப்பாதையில் லாரி ஒன்று பாதையை மறித்துக்கொண்டு ரிப்பேராகி நிற்கிறது. மலைப்பாதை என்பதால் முன்னேற வழியே இல்லை. பானுமதி பிரசவ வலியில் துடிக்கிறார். இந்தப்பக்கமிருந்து லாரியை கடந்து செல்லமுடியாது என்பதால், அந்தப்பக்கமிருந்து ஒரு ஆம்புலன்ஸை வரவைத்து அதில் கர்ப்பிணியை அனுப்பிவிடலாம் என்றால், அழைப்பதற்கு செல்போனில் டவர் இல்லை.

Brave ambulance driver Stalin

ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் செல்போன் டவர் கிடைக்கும் என்பதால், நள்ளிரவு பதினோறு மணிக்கு ஆம்புலன்ஸ் வண்டியில் கர்ப்பிணியோடு தனது ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரை விட்டுவிட்டு ஓட்டம் எடுக்கிறார் ஸ்டாலின். செல்போன் டவர் கிடைக்கும்வரை நிற்காமல் ஓடியவர், டவர் கிடைத்த அடுத்த வினாடி மற்றொரு 108க்கு தகவல் தர, சைரன்கள் அலற மறுபக்கத்திலிருந்து வில்லிருந்து புறப்பட்ட அம்பென பாய்கிறது ஆம்புலன்ஸ். விஷயம் சொல்லிவிட்ட திருப்தியில் திரும்பவும் தனது வண்டிக்கு ஓடிவருகிறார் ஸ்டாலின். வந்துப்பார்த்தால் வண்டியில் குவா குவா. அழகான சிசு குஞ்சாமணியோடு சிரித்துக்கொண்டிருக்க, பிரசவமாகியிருந்தாலும் மருத்துவ உதவி தேவைப்படும் என்பதால், லாரிக்கு அந்தப்பக்கம் வந்து நின்ற ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டுத்தான் ஓய்ந்திருக்கிறார் ஸ்டாலின். அடுத்த சுதந்திர தினத்துக்கு இந்த ஸ்டாலினுக்கு ஒரு விருது குடுங்கப்பா!