நிறுவனங்களுக்கு அவசரத்துக்கு கடன் கொடுங்க…. ஆனா ரூ.200 கோடிக்கு மேல் கொடுக்காதீங்க… வங்கிகளுக்கு அரசு வலியுறுத்தல்

 

நிறுவனங்களுக்கு அவசரத்துக்கு கடன் கொடுங்க…. ஆனா ரூ.200 கோடிக்கு மேல் கொடுக்காதீங்க… வங்கிகளுக்கு அரசு வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள வர்த்தக வீழ்ச்சியை சமாளிக்க, நிறுவனங்களுக்கு அவசரகால கடன் கொடுங்க. ஆனால் ஒரு கணக்குக்கு ரூ.200 கோடிக்கு மேல் கடன் கொடுக்காதீங்க என வங்கிகளுக்கு மத்திய அரசு வலிறுத்தியுள்ளதாக தகவல்.

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கபட்டுள்ளது. அத்தியாவசியமில்லாத நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ளதால் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு தொழில்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

நிறுவன கடன்

இந்நிலையில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள வர்த்தக வீழ்ச்சியை சமாளிக்க, நிறுவன கடன்வாங்குபவர்களுக்கு அவசர கால கடன் வழங்கும்படி பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதாவது அனுமதிக்கப்பட்ட மூலதன கடன்களுக்கு மேல் மற்றும் அதற்கு மேற்பட்ட நிதிகளில் 10 சதவீதம் கிடைக்கும்படி செய்யுங்கள். அதேசமயம் ஒரு கடன் கணக்கு ரூ.200 கோடிக்கு மேல் கொடுக்க கூடாது எனவும் வங்கிகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எஸ்.பி.ஐ.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏற்கனவே அவசரகால கடன்களை வழங்க தொடங்கிவிட்டதாக தகவல். இதனை பின்பற்றி மற்ற பொதுத்துறை வங்கிகளும் அவசர கால கடன்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் மற்றும் எஸ்.பி.ஐ. இது தொடர்பாக எந்தவொரு பதிலையும் உடனடியாக தெரிவிக்கவில்லை.