நிறம் மாறும் மெக்சிகோ கடற்கரை…! ஏன் இந்த விபரீதம்?

 

நிறம் மாறும் மெக்சிகோ கடற்கரை…! ஏன் இந்த விபரீதம்?

மெக்சிகோவில் உள்ள கடற்கரை முழுவதும் பழுப்பு நிறமாக மாறி துர்நாற்றம் வீசுவதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. 

மெக்சிகோவில் உள்ள கடற்கரை முழுவதும் பழுப்பு நிறமாக மாறி துர்நாற்றம் வீசுவதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. 

மெக்சிகோவிலேயே மிகவும் பிரபலமானது பீச். மெக்சிகோ சிட்டியில் இருந்து காரில் சென்றால் 18 முதல்19 மணி நேரப் பயணம். இந்த கடற்கரையை ரசிப்பதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு படையெடுப்பார்கள். அமைதியான அலை ஓசை,  நீளமான பாதை, அழகான மணற்பரப்பு என இயற்கையின் வருணனையில் அமைந்துள்ளது மெக்சிகன் பீச். இப்படி பல ஹனிமூன் ஜோடிகளுக்கு உறைவிடம் கொடுத்த மெக்சிகோ கடற்கரை இன்று பழுப்பு நிறமாக மாறிவருகிறது. 

மெக்சிகோ கடற்கரைகளில் பெருகிவரும் துர்நாற்றம் மிகுந்த கடற்பாசி, கடல் பகுதியைப் பழுப்பு நிறமாக மாற்றிவருகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். உலக வெப்பமயமாதலே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. ரசாயன உரம் கடலில் கலப்பதாலும், கடலடி நீரோட்டம் காரணமாகவும், கடற்பாசிப் படலங்கள் உருவாகிக் கரைக்கு வருகின்றன. அமேசான் நதிக்கு அப்பாலுள்ள அட்லாண்டிக் வெப்பமண்டலக் கடற்பகுதியிலிருந்து அவை மெக்சிகோவுக்கு அடித்துவரப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எவ்வளவு கடற்பாசி கரைக்கு வந்துகொண்டிருக்கிறது என்பதை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனால் பல கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என விலங்கின ஆர்வலர்கள் எச்சரிக்கைவிடுக்கின்றனர். 

ஆனால், அது எங்கே எப்போது கரையொதுங்கும் என்பதைக் கணிப்பது அவ்வளவு எளிதல்ல. அழகையும் அமைதியையும் தேடிவரும் சுற்றுலா பயணிகளை இந்த கடற்பாசிகள் முகம்சுழிக்க வைக்கின்றார். இந்த செய்தி மெக்சிகோ கடற்கரையில் அமர்ந்து இயற்கையை ரசித்துக்கொண்டு பிகினி உடையில் போஸ் கொடுக்கும் ஹனிமூன் ஜோடிகளுக்கு இந்த செய்தி சோகத்தை ஏற்படுத்திகிறது.