நிர்வாணமாக போகும் ஒருவர் மீது  போலீசார் தாக்குதல் -வைரலாகும் வீடியோ பற்றி விசாரணை

நிர்வாணமாக போகும் ஒருவர் மீது  போலீசார் தாக்குதல் -வைரலாகும் வீடியோ பற்றி விசாரணை

வீடியோவின் நம்பகத்தன்மை மற்றும் தோற்றம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த வீடியோ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்களையும் இந்த சம்பவம் நடந்த இடத்தையும் புலனாய்வாளர்கள் இன்னும் அடையாளம் காணவில்லை.
போலிஸ் அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்,

அஜ்மீர் நகரத்தில் வைரலாகி வந்த ஒரு வீடியோ பற்றி போலீசார் வெள்ளிக்கிழமை விசாரணையைத் தொடங்கினர். அதில் சாலையில் போகும் ஒரு ஒரு நிர்வாணமான  மனிதரை போலீசார் தடிகளால்  அடிப்பதைக் காணலாம்.
வீடியோவின் நம்பகத்தன்மை மற்றும் தோற்றம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த வீடியோ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்களையும் இந்த சம்பவம் நடந்த இடத்தையும் புலனாய்வாளர்கள் இன்னும் அடையாளம் காணவில்லை.
போலிஸ் அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர், ஆனால் இது குறித்து விசாரிப்போம் என்று கூறினர். அந்த வீடியோவில் ஒருவர்  சாலையில் நிர்வாணமாக சுற்றித் திரிவதை வீடியோ காட்டுகிறது. காவல்துறையினர் அவரை வெளியேறச் சொல்லும்போது, ​​அவர் மறுத்து வாதாடத் தொடங்குகிறார். பின்னர், இரண்டு போலீசார் அந்த நபரை அடிக்கத் தொடங்குகிறார்கள். அந்த நபர் ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்’ என்பதால் அவரை அடிக்க வேண்டாம் என்று பொதுமக்கள்  காவல்துறையினரைக் கேட்டுக்கொள்கிறார்கள்.
அந்த வீடியோ வைரலாகிய பின்னர், சிலர்  அந்த வீடியோவில் காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளை கோருகின்றனர் . 
அந்த நபர் போதைக்கு அடிமையாகி பொதுமக்களுக்கு  தொல்லை கொடுத்து  வருகிறார் என்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அவரைக் கட்டுப்படுத்த போலீசார் தாக்க வேண்டியதாக இருந்தது