நிர்வாணமாக நின்று நிதி திரட்டிய பெண் ! காட்டுத் தீயை அணைக்க நிதியுதவி !

 

நிர்வாணமாக நின்று நிதி திரட்டிய பெண் ! காட்டுத் தீயை அணைக்க நிதியுதவி !

ஆஸ்திரேலியாவின் காடுகளில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில், லட்சக்கணக்கான உயிர்கள் உயிரிழந்தன. எவ்வளவு போராடியும் தீயை அணைப்பது ஒரு சவாலாகவே இருந்தது. இந்நிலையில், மழை பெய்யத் தொடங்கியவுடன் தீ கொஞ்சம் கொஞ்சமாக அணையத் தொடங்கியது

ஆஸ்திரேலிய காடுகளில் ஏற்பட்ட தீணை அணைக்க நிர்வாண படங்கள் மூலம் இந்திய மதிப்பில் ரூ.5 கோடி வசூலித்து கொடுத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த மாடல்.
ஆஸ்திரேலியாவின் காடுகளில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில், லட்சக்கணக்கான உயிர்கள் உயிரிழந்தன. எவ்வளவு போராடியும் தீயை அணைப்பது ஒரு சவாலாகவே இருந்தது. இந்நிலையில், மழை பெய்யத் தொடங்கியவுடன் தீ கொஞ்சம் கொஞ்சமாக அணையத் தொடங்கியது.
இதற்கிடையே நிர்வாண புகைப்படங்களை அனுப்பி ஆஸ்திரேலியா காட்டுத் தீ மீட்புப் பணிக்காக 7 லட்சம் டாலர்களை மாடல் ஒருவர் வசூல் செய்துள்ளார்.

 

அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் கைலன் வார்ட் தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பி நிதி திரட்டி கொடுத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதில், என்னுடைய நிர்வாண புகைப்படங்களை தனிப்பட்ட நபர்களுக்கு அனுப்புகிறேன். அதற்காக அவர்கள் 10 டாலர்கள் அனுப்ப வேண்டும் என கூறியிருந்தார். இந்த தொகை ஆஸ்திரேலியா காட்டுத்தீ மீட்புப் பணிக்காக பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

 

tweet-01

அவருக்கு 2 நாட்களில் இந்திய மதிப்பில் ரூ.5 கோடி வசூலானது. இது குறித்து மீண்டும் பதிவிட்ட அவர், இது உண்மைதானா? என் ட்வீட்டின் எதிரொலியாக ஆஸ்திரேலியா காட்டுத் தீ மீட்புப் பணிக்கு $7 லட்சம் டாலர்கள் வசூல் ஆகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். சிலர் தனிப்பட்ட முறையில் பணம் சம்பாதிக்க இப்படி போட்டுள்ளதாக குற்றம்சாட்டினர். அதற்கு பதிலளித்த அவர், நான் வசூல் செய்த பணத்தை எனக்காக பயன்படுத்தவில்லை. பணம் அனுப்புபவர்கள் ஆஸ்திரேலியா காட்டுத்தீ மீட்பு நிவாரண நிதிக்கு நேரடியாகவே அனுப்பலாம். அதற்காக ஆதாரத்தை எனக்கு அனுப்புங்கள் என்று தெரிவித்துள்ளார்.