நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடுவாரா? இல்லையா? என யாரும் கேட்கவில்லை – ராகுல்காந்தி

 

நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடுவாரா? இல்லையா? என யாரும் கேட்கவில்லை – ராகுல்காந்தி

நாட்டில் என்ன நடக்கிறது என்பதே மத்திய நிதியமைச்சருக்கு தெரியாது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

இன்று நாடாளுமன்றத்தில் வெங்காய விலையுயர்வு பிரச்னை எழுந்தது. அப்போது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை எனக்கூறினார். அதற்கு சிதம்பரம் அப்ப நிர்மலா சீதாராமன் வெண்ணெய் பழம் சாப்பிடுவாரா என விமர்சித்திருந்தார்.

rahulgandhi

இந்நிலையில் கேராளவில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல்காந்தி, நாட்டில் என்ன நடக்கிறது என்பதே மத்திய நிதியமைச்சருக்கு தெரியாது. அடிப்படையில் அவர் ஒரு திறமையற்றவர். வெங்காய விலை உயர்வு பற்றி கேட்டால் நான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை என்கிறார். மத்திய காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நாட்டின் நிதிப்பொறுப்பை திறமைசாலிகள் கையாண்டனர். நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் என்பதாலேயே வெங்காய விலைவாசி உயர்வு குறித்து அவரிடம் கேட்கிறோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடுவாரா? இல்லையா? என்பது குறித்து யாரும் கேட்கவில்லை” எனக்கூறினார்.