நிர்மலா சீதாராமனுக்கு மாற்றா சிந்தியா? – திக்விஜய் சிங் வெளியிட்ட பகீர் தகவல்

 

நிர்மலா சீதாராமனுக்கு மாற்றா சிந்தியா? – திக்விஜய் சிங் வெளியிட்ட பகீர் தகவல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் அளித்துள்ள பேட்டியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்லது உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மாற்றாக ஜோதிராதித்ய சிந்தியா நியமிக்கப்படலாம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நிர்மலா சீதாராமனுக்கு மாற்றாக ஜோதிராதித்ய சிந்தியா செயல்பட வாழ்த்து என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து தன்னுடைய ஆதரவு மத்தியப் பிரதேச எம்.எல்.ஏ-க்களுடன் வெளியேறியுள்ளார் ஜோதிராதித்ய சிந்தியா. பிரதமர் மோடியை சந்தித்து வந்த நிலையில் அவருக்கு மாநிலங்களை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்றும் மத்திய கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் பேச்சுக்கள் எழுந்தள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் அளித்துள்ள பேட்டியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்லது உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மாற்றாக ஜோதிராதித்ய சிந்தியா நியமிக்கப்படலாம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

digvijay

காங்கிரஸ் கட்சி ஒதுக்கி வைத்ததால் ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறியதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பாக என்.டி.டி.வி வெளியிட்ட செய்தியை வெளியிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதி;, “அவர் ஓரங்கட்டப்பட்டாரா என்ற கேள்விக்கே இடமில்லை. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த குறிப்பாக குவாலியர் சம்பால் பகுதியைச் சேர்ந்த எந்த ஒரு காங்கிரஸ் கட்சித் தலைவரையும் கேட்டுப் பாருங்கள், கடந்த 16 மாதங்களில் அவருடைய ஒப்புதல் இன்றி எதுவும் அங்கு நடந்தது இல்லை. வருத்தம்… மோடிஷா பாசறையில் சிறப்பாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறியிருந்தார்.

மேலும் அவர் வெளியிட்டிருந்த ட்வீட்களில், “மோடிஷா அரசாங்கத்தின் கீழ் இந்தியாவுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை அவர் காண்கிறார். நமது வங்கிகள் சரிந்துகொண்டிருக்கின்றன, ரூபாய் நோட்டு வீழ்ச்சியடைந்து வருகிறது, பொருளாதாரம் கீழே விழுந்துள்ளது. சமூக நீதி அழிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி என்று அவர் கருதுகிறார். 

jyothirathiya

அக்கட்சியில் அவர் அமித்ஷா அல்லது நிர்மலா சீதாராமனுக்கு மாற்றாய் மாற வேண்டும். அவருடைய திறமை குறித்துப் பேசினால் நிச்சயம் அவர் சிறந்த பணியாளர். மோடிஷா பாசறையின் கீழ் வளரட்டும். மகாராஜாவுக்கு எங்கள் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே சிந்தியாவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்படும், மத்திய அமைச்சராவார் என்று பேச்சு நிலவும் நிலையில் திக்விஜய் சிங்கின் இந்த பதிவு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. முதலமைச்சர் பதவி வழங்கப்படமாட்டாது என்ற நிலையில் மிகப் பெரிய மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்… அது நிதி அமைச்சகமா அல்லது உள்துறை அமைச்சகமா என்ற சந்தேகத்தை திக்விஜய் சிங் ட்வீட் எழுப்பியுள்ளது. மத்தியில் இந்த இரண்டு அமைச்சகங்கள் மீதும் மக்களுக்கும் கட்சியினருக்கும் நம்பிக்கை குறைந்து வருகிறது என்பது இந்த சந்தேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.