நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் அடுத்த தந்திரம்….. சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல்…..

 

நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் அடுத்த தந்திரம்….. சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல்…..

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் 3 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கக்கோரி சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர்களில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் சிறார் என்பதால் சில ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது. நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்து தங்களது தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிபோட்டு வந்தனர். இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தன்னுடைய வக்கீல்கள் தன்னை தவறுதலாக வழிநடத்தியதால் தனக்கு மறுபடியும் அனைத்து சட்ட தீர்வுகளையும் வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் முகேஷ் சிங் மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேரின் அனைத்து தீர்வுகளும முடிவடைந்து விட்டதால் வரும் வெள்ளிக்கிழமையன்று உறுதியாக தூக்கிலிடப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போலவே நிர்பயா குற்றவாளிகள் தூக்கு தண்டனையை தள்ளி போட புதிய வழிமுறையை கையாண்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றம்

உள்நாட்டு நீதிமன்றங்களில் இதற்கு மேல் எந்த மனுவும் தாக்கல் செய்ய முடியாது என்பதால், நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் அக்சய் சிங், பவன் குப்தா மற்றும் வினய் குமார் ஆகிய 3 பேரும் சர்வதேச நீதிமன்றத்தை நேற்று நாடியுள்ளனர். தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை நிறுத்தக்கோரி அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.