நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் வித்தியாசமான சிக்கல்… திகார் சிறைச்சாலைக்கு வந்த சோதனை!

 

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் வித்தியாசமான சிக்கல்… திகார் சிறைச்சாலைக்கு வந்த சோதனை!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்ற வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான நபர் இல்லாததால் புதிய நபரை திகார் சிறை நிர்வாகம் தேடி வருகிறது. லிவரை இழுத்து உயிரைப் பறிக்கும் வேலை என்பதால் பலரும் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

hang

டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கி சாலையில் தூக்கி வீசப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நிலையில், தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான நபர் கிடைக்கவில்லை என்று திகார் சிறைச்சாலை அதிகாரி தெரிவித்துள்ளார்.

punishment

நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும்போது கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. அப்போது, சிறைச்சாலை அதிகாரி ஒருவர் அப்சல் குரு நிற்கும் மேடையை திறக்கும் லிவரை இழுக்க ஒப்புக்கொண்டார். அவசரமான சூழல் காரணமாக வேறு வழியின்றி அவர் அதை ஒப்புக்கொண்டு செய்தார். 
ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. ஒளிவுமறைவின்றி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. எனவே, மேடையின் லிவரை இழுப்பதற்கான சரியான நபர் யாராவது கிடைப்பார்களா என்று தேடி வருகிறோம். முன்பு திகார் சிறையில் லிவர் இழுக்கும் வேலையை செய்துவந்த நபர்களின் சொந்த ஊருக்குச் சென்று யாராவது இந்த வேலையை செய்ய வருகின்றீர்களா என்றும் விசாரித்து வருகிறோம்.

thihar

 தூக்கு தண்டனைகள் குறைந்துவிட்டன. எப்போதாவது ஒன்றுதான் நிகழ்கிறது. இதனால், திகார் சிறைக்கு என்று லிவரை இழுக்கும் நபரை வேலைக்கு எடுப்பது இல்லை. ஒரே ஒரு முறை மட்டும் காண்ட்டிராக் அடிப்படையில் அந்த பணி வழங்கப்படுகிறது. 
தூக்கு தண்டனை பெற்றவர்களில் வினய் குமார் என்பவர் மட்டுமே கருணை மனுவை அனுப்பியுள்ளார். அவரது மனு முறைப்படி துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் அதை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்புவார். அவர்கள் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார். ஜனாதிபதியின் முடிவு அடிப்படையில் தண்டனை நிறைவேற்றுவது முடிவு செய்யப்படும்

president

.மனு நிராகரிக்கப்பட்டால் வினய் குமாருக்கு பிளாக் வாரண்ட் பிறப்பிக்கப்படும். அதன் படி எப்போது தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது என்று அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அறிவிக்கப்படும். பிறகு தண்டனை நிறைவேற்றப்படும்.
மற்ற குற்றவாளிகளான முகேஷ், பவன் மற்றும் அக்‌ஷய் கருணை மனுவை அனுப்பவில்லை. அவர்களுக்கு கருணை மனு அனுப்புவது குறித்து முடிவெடுத்து செயல்பட ஒரு வார காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் அவர்கள் அனுப்பவில்லை என்றால் நீதிமன்றம் தேதியை முடிவு செய்யும். ஒரு மாதத்தில் தண்டனை வழங்க வாய்ப்பு உள்ளது” என்றார்.
லிவரை இழுப்பது என்பது சாதாரண வேலைதான். ஆனால், அது ஒரு உயிரை பறிக்கும் வேலையும் கூட. இதனாலேயே பலரும் இந்த பணியை நிறைவேற்ற முன்வருவது இல்லை. ஆள் கிடைக்காததால் என்ன செய்வது என்று திகார் நிர்வாகமும் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.