நிரவ் மோடி தலைமறைவு குற்றவாளி: நீதிமன்றம் அறிவிப்பு

 

நிரவ் மோடி தலைமறைவு குற்றவாளி: நீதிமன்றம் அறிவிப்பு

பிரபல தொழிலதிபர் நிரவ் மோடியை தலைமைறைவு குற்றவாளி என சூரத் நீதிமன்றம் அறிவித்துள்ளது

சூரத்: பிரபல தொழிலதிபர் நிரவ் மோடியை தலைமைறைவு குற்றவாளி என சூரத் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கும் அதிகமாக சட்டவிரோத பரிவர்த்தனையும், ரூ.280 கோடி மோசடி செய்ததாகவும் குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரி நிரவ் மோடி மீது பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்துள்ளது.

இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஜனவரி மாத தொடக்கத்திலேயே, நிரவ் மோடி, அவரின் மனைவி, சகோதரர் ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டனர். அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடியை இந்தியா கொண்டு வர மத்திய ஆசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தொழிலதிபர் நிரவ் மோடியை தலைமைறைவு குற்றவாளி என சூரத் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சூரத் வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிரவ் மோடியை தலைமைரவு குற்றவாளி என அறிவித்துள்ளது.