நியூ இயர்க்கு பார்ட்டிக்கு போனால் போலீஸ் புடிக்குமே என்ற கவலையா…! டோண்ட் ஓரரி… இதை ட்ரை பண்ணுங்க… 

 

நியூ இயர்க்கு பார்ட்டிக்கு போனால் போலீஸ் புடிக்குமே என்ற கவலையா…! டோண்ட் ஓரரி… இதை ட்ரை பண்ணுங்க… 

ஒரு வழியாக 2019-ன் இறுதிக்குள் வந்துவிட்டோம்! புத்தாண்டுக்கு வெளியில் போகலாம் என்றால் ‘உற்சாகமா’ இருக்கத்தான் விரும்புவார்கள். போலீஸ் பிடித்தால் வெயிட்டான ஃபைன், வெளிநாடு போக்கத்தடை என்று இந்த வருஷம் ஏகப்பட்ட கெடுபுடி இருக்கும். வருடத்தின் முதல் நாளே எதுக்கு தெண்டச் செலவு என்று யோசித்து மண்டை காய்ந்து போயிருக்கிங்களா..! ? உங்களுக்காக சில மாற்று திட்டங்கள் இதோ ரெடி! 

ஒரு வழியாக 2019-ன் இறுதிக்குள் வந்துவிட்டோம்! புத்தாண்டுக்கு வெளியில் போகலாம் என்றால் ‘உற்சாகமா’ இருக்கத்தான் விரும்புவார்கள். போலீஸ் பிடித்தால் வெயிட்டான ஃபைன், வெளிநாடு போக்கத்தடை என்று இந்த வருஷம் ஏகப்பட்ட கெடுபுடி இருக்கும். வருடத்தின் முதல் நாளே எதுக்கு தெண்டச் செலவு என்று யோசித்து மண்டை காய்ந்து போயிருக்கிங்களா..! ? உங்களுக்காக சில மாற்று திட்டங்கள் இதோ ரெடி! 

1. உங்களுக்கு நீண்ட நாட்களாகவே போக வேண்டும் என்று போக முடியாமல் இருக்கும் சுற்றுலா தளத்திற்கு போய் வாருங்கள். 

travel

2. உங்கள் ஊரிலேயே இருக்கும்  சிறப்பு தளங்களை சுற்றிபார்க்கலாம்.

3. அமைதி விரும்பியாக இருந்தால் ஒரு லாங் டிரைவ் எடுங்க.. உங்களுக்கு பிடித்த பாடல்களைக் கேட்டபடி பயணிப்பது எவ்வளவு சுகமானது என்று உங்களுக்கும் தெரியும்.தவிர,ஆண்டின் முதல் நாள் பயணம் செய்தால்; வருடம் முழுக்க பயணம் செய்யலாம் என்று சிலர் நம்புகிறார்கள்.உங்களுக்கும் அது வாய்க்கட்டும்.

bike-ride

4. உங்களுக்கு பிடித்த ஷோக்களை மீண்டும் பாருங்கள் இது உங்களுக்கு போராக இருக்காது ஏனென்றால் உங்கள் மனதிற்கு சில ஷோக்கள் மிகவும் நெருக்கமானவையாக  இருக்கும் அவைகளை தேர்ந்தேடுத்து நியூ இயர் ஈவ் கொண்டாடுங்கள்.

5. நீங்கள் நெடுநாட்களாக பார்க்கவேண்டும் என்று நினைத்த ஷோவை பாருங்கள்.

6. உங்கள் வீடு அல்லது உங்கள் அறையை உங்களுக்கு பிடித்தமான முறையில் அழகு படுத்துங்கள். உங்கள் அறைக்கு ஒரு புதிய லுக்கை கொடுங்கள்.

7. உங்களுக்கு சமையல் மிகவும் பிடிக்கும் என்றால் உங்கள் சமையல் திறமையை நியூ இயர் அன்று கொட்டி தீர்த்துவிடுங்கள். உங்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து நண்பர்களை அழைத்து சாப்பிட வையுங்கள்.

8. உங்களுக்கு புதியவைகளை கண்டுபிடிக்க ஆர்வம் அதிகமா? அப்போ உங்களுக்கு பிடித்த வகையில் பானங்களை தயாரித்து குடித்து மகிழுங்கள் அதாவது ஜூஸ், ஆகியவை.

9. ஒருநாளைக்கு உங்கள் டையட்டை ஒதுக்கி நீங்கள் எப்போதும் சாப்பிடவேண்டும் என்று என்னும் உணவுகளை சாப்பிடுங்கள்.(நியூ இயர்க்கு மட்டும்)

10. அழகை ஆராதிப்பவரா நீங்க, அப்போ உங்கள் சருமத்தையும் உடலையும் நன்கு பராமரித்துக்கொள்ளுங்கள்.பப்பிள் பாத் எடுத்துக்கொள்ளுங்கள்,ஸ்பா, பேசியல்,மெனிகியூர்,பெடிக்யூர் ஆகியவைகளை செய்துகொண்டு அழகுபடுத்திக்கொள்ளுங்கள்.

selfie

11. உங்கள் பிரியமான நண்பர்கள் தூர தேசங்களில் இருந்தால் அவர்களிடம் வாட்ஸ்ஆப் கால் பண்ணிப் பேசுங்க. உங்கள் அன்பை தெரிவியுங்கள்.

12. உங்களுக்கு பிடித்த ஆடைகளை அணிந்து எண்ணென்ற செல்பிக்களை எடுத்துக்கொள்ளுங்கள் உங்க நியூ இயர் மறக்கமுடியாத அளவு இருக்கட்டும், மேலும் உங்களுக்கு பிடித்த பாடலுக்கு நடனமாடுங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சந்தோசமாக இருங்க.

13. நீங்கள் ஒரு கலாரசிகன்/ரசிகையாக இருந்தால் கவிதை எழுதுங்கள், ஓவியம் தீட்டுங்கள் உங்கள் மனதிற்கு ஆனந்தத்தை தரும்.

artist

14. உங்கள் பழைய சின்ன வயசு ஆல்பம் இருந்தால் அதை நீங்கள் ப்ரொஜெக்டரில் போட்டுப்பாருங்கள் அது உங்கள் பழைய ஞாபகங்களை கொண்டுவரும் இது மிகவும் சொல்லமுடியாத ஒருவித மகிழ்ச்சியை தரும்.

15. ஷாப்பிங் பண்ணுங்க உங்களுக்கு பிடித்த பொருட்டாக்களை வாங்குங்க.உங்க வார்ட்ரோபை நிரப்பி தள்ளுங்கள்.

ஒரு ராத்திரி வெளியில் போக முடியாது என்று சொன்னதுக்கு இவ்வளவு ஐடியாவா என்று ஆச்சர்யப்படவோ / திட்டவோ வேண்டாம்.புது வருஷம் அதுவுமா எதுக்கு கோவப்படணும்…மேலே சொன்ன ஐடியாக்களில் எதைச் செய்தாலும் இந்த பத்தாண்டு உங்களுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.என்ஜாய்… ஹாப்பி நியூ இயர் 2020.