நியூசிலாந்து- இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டியால் காணாமல் போன விரல்! 

 

நியூசிலாந்து- இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டியால் காணாமல் போன விரல்! 

நியூசிலாந்து- இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டியால் விபத்தில் காயமடைந்தவருக்கு ஒரு விரலே இல்லாமல் போன விபரீதம் கொல்கத்தாவில் அரங்கேறியுள்ளது. 

நியூசிலாந்து- இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டியால் விபத்தில் காயமடைந்தவருக்கு ஒரு விரலே இல்லாமல் போன விபரீதம் கொல்கத்தாவில் அரங்கேறியுள்ளது. 

கொல்கத்தாவை சேர்ந்த நிலோட்பால் சக்ரபோர்தி, கெமிக்கல் இன்ஜினியராக பணியாற்றிவருகிறார். இவர் அலுவலகத்துக்கு சென்றுக்கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார். இதில் அவருடைய இடது கை மோதிர விரல் இரண்டாக துண்டித்தது. உடனே துண்டிக்கப்பட்ட விரலுடன் நண்பரை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சக்ரபோர்தியை பரிசோதித்த மருத்துவர்கள் துண்டித்த விரலை அறுவை சிகிச்சை செய்து ஒட்ட வைக்க முடியும் என தெரிவித்தனர்.  சக்ரபோர்தியின் மனைவி சயானிகா, துண்டிக்கப்பட்ட விரலை மருத்துவமனை ஊழியர்களிடம் அளித்து, அறுவைசிகிச்சை வரை பாதுகாக்கும்படி தெரிவித்துள்ளார். அதன்பின் சக்ரபோர்திக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் வீட்டுக்கு செல்லப்பட்டார். மறுநாள் காலை 10 மணிக்கு சக்ரபோதி அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துவரப்பட்டார். மருத்துவமனை ஊழியர்களிடம் அறுவை சிகிச்சைக்காக விரலை கொண்டுவரும்படி கூறியுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் விரல் தொலைந்துவிட்டதாகவும், துண்டித்த விரலை மீண்டும் ஒட்டவைக்க முடியாது என்றும் அலட்சியமாக பதிலளித்துள்ளனர். 

 நிலோட்பால் சக்ரபோர்தி

இதுகுறித்து சக்ரபோர்தியின் மனைவி சயானிகா, ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நான், என் கணவரின் விரலை மருத்துவமனை ஊழியர்களிடம் கொடுக்கும்போது அவர்கள் இந்தியா- நியூசிலாந்து அரையிறுதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். நான் கேட்ட கேள்விகளுக்குக்கூட அவர்கள் அலட்சியமாக பதில் கூறினர். தற்போது  கிரிக்கெட் மீதுள்ள மோகத்தால் என் கணவரின் விரலை தொலைத்துள்ளனர்  என கூறினார்.