நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 5-0 என கைப்பற்றுவோம் – விராட் கோலி நம்பிக்கை

 

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 5-0 என கைப்பற்றுவோம் – விராட் கோலி நம்பிக்கை

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 5-0 என கைப்பற்றுவோம் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஹாமில்டன்: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 5-0 என கைப்பற்றுவோம் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து எதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து நடந்த அடுத்த போட்டியிலும் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில், நேற்று இந்தியாவுக்கு எதிராக நடந்த 3-வது டி20 போட்டி சமனில் முடிந்ததை தொடர்ந்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. ரோகித் ஷர்மாவின் கடைசி 2 அட்டகாச சிக்ஸர்களால் இந்திய அணி போட்டியை வென்றதோடு, டி20 தொடரையும் கைப்பற்றியது. டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளையும் ஹாட்ரிக் வகையில் இந்திய அணி வென்றுள்ளது. மேலும் நியூசிலாந்து மண்ணில் முதல்முறையாக இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.

kohli

இந்த நிலையில் கேப்டன் விட்டார் கோலி பேசுகையில், “ஒரு கட்டத்தில் இந்திய அணி தோற்று விடும் என்று நினைத்தேன். கேன் வில்லியம்சன் (95 ரன்கள்) பேட்டிங் செய்ததை பார்த்தவகையில், அவருக்காக வருத்தம் அடைகிறேன். 20-வது ஓவரின் கடைசி பந்தை ஸ்டம்ப் நோக்கி வீச வேண்டும் என்று திட்டமிட்டோம். ஏனெனில் ஒரு ரன் எடுக்க முடியாமல் போக வாய்ப்புண்டு. ரோகித் ஷர்மாவின் பேட்டிங் மிகவும் அற்புதமாக இருந்தது. அவர் ஒரு பந்தை விளாசினால் பந்துவீச்சாளர் நெருக்கடிக்கு உள்ளாவார் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் தொடரை 5-0 எனக் கைப்பற்ற விரும்புகிறோம். ஆனால், இந்த நேரத்தில் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். சைனி, வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்கள் இந்த சீதோஷ்ண நிலையில் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க விரும்புகிறோம்’’ என்றார்.