நியாயமா தேர்தல் நடந்தா பாஜகவுக்கு 40 சீட்டு கூட கிடைக்காது:  மோடியை கழுவி ஊற்றி கடிதம் எழுதிய பாஜக தலைவர் ?!…

 

நியாயமா தேர்தல் நடந்தா பாஜகவுக்கு 40 சீட்டு கூட கிடைக்காது:  மோடியை கழுவி ஊற்றி கடிதம் எழுதிய பாஜக தலைவர் ?!…

அத்வானி குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்படவேண்டும் என நாடே எதிர்பார்த்த நிலையில் ராம் நாத் கோவிந்தை குடியரசு தலைவர் வேட்பாளாராக பாஜக தலைமை அறிவித்தது.

2014-ஆம் ஆண்டு சோனியா காந்தியை எதிர்த்து ரே பரலி தொகுதியில் போட்டியிட்ட அஜய் அகர்வால், சமீபத்தில் மோடிக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

zxczvv

அஜய் அகர்வால் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மோடி மீது பல்வேறு குற்றசாட்டுகளை அடுக்கியுள்ளார். அத்வானி குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்படவேண்டும் என நாடே எதிர்பார்த்த நிலையில் ராம் நாத் கோவிந்தை குடியரசு தலைவர் வேட்பாளாராக பாஜக தலைமை அறிவித்தது. அதன் பின்னணியில் குஜராத் தேர்தல் இருந்தது . குஜராத்தில் பாஜக படுதோல்வி அடையும் என்ற நிலை இருந்தபோது ராம்நாத்தை குடியரசுத் தலைவராக்கி கோலி சமுதாய வாக்குகளை அறுவடை செய்தது பாஜக.

cd

குஜராத் சட்டப் பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற நான்தான். குஜராத் தேர்தலின்போது ஜங்க்புராவில் மணி சங்கர் அய்யர் வீட்டில் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானிய அதிகாரிகள் இடையே சந்திப்பு நடைபெற்றது என்பதை கூறியது நான்தான்.

xvbv

இதை குறிப்பிட்டு தேசப் பாதுகாப்பு குறித்து பிரச்சார மேடைகளில் நீங்கள் (மோடி) பேசி வந்தீர்கள். இதன் காரணமாகவே குஜராத்தில் படு தோல்வியடைய இருந்த பாஜக அங்கு வெற்றி பெற்றது. இந்த விவரங்களை நான் வெளியிட்டதால்தான் குஜராத்தில் பாஜக வென்றதாக ஆர்எஸ்எஸ்எஸ் அமைப்பு ஒப்புக் கொண்டது, அதற்கு ஆதாரமாக என்னுடன் ஆர்எஸ்எஸ்எஸ் தலைவர் தத்தத்ரேயா ஹோசபலே பேசிய ஆடியோ ஆதாரம் உள்ளது. நீங்கள் (மோடி) ஒரு நன்றி கெட்டவர். இந்த தேர்தல்  நியாயமாக நடைபெற்றால் பாஜக வெறும் 40 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றிபெறும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்க: கலைஞர் இல்லாத முதல் தேர்தல்: ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மு.க.ஸ்டாலின்